Cinema

பிக் பாஸ் பிரபலத்திற்கு கார் டிரைவரால் வந்த ஆபத்து!

actor serrina
actor serrina

தமிழ் திரை உலகில் மேடை நாடகங்கள் சினிமாவாக பார்க்கப்பட்ட காலம் போய் தற்போது சினிமா வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டம்மிஸ் ட்ராமா என்கின்ற ஒரு பெயரில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா முனிஸ்கான், ஸ்ரீ ரஞ்சனி பல நடிகர்களின் நடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் மூலம் செரினா என்கின்ற புதிய நடிகையும் அறிமுகமானார். அதோடு இந்த முழு தொகுப்பும் செரினாவை பற்றியதே! மாடலாகவும் தொழிலதிபராகவும் வலம் வந்து கொண்டிருந்த செரினா சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியான வினோதய சித்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றார். இருப்பினும் பலரால் அறியப்படாத முகமாக இருந்து வரும் ஷெரினாவிற்கு அவரது கார் டிரைவர் மூலமாகவே ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. 


செரினா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது சென்னை ராயப்பேட்டையில் தனது அண்ணனுடன் வசித்து வருகிறார். அப்பொழுது செரினாவிடம் நான்கு சக்கர ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் நடவடிக்கைகள் அனைத்தும் சரியில்லாத காரணத்தினால் வேலையில் இருந்து நீக்கியதாகவும் அதற்காக கார்த்திக் ஆத்திரத்தில் தனது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து குடித்துவிட்டு செரினாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறிது நேரம் இருந்ததாகவும் அதற்குப் பிறகு அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலான செயல்களை செய்து வந்த கார்த்திக் வாட்ஸ் அப் மூலம் செரினாவிற்கு கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார். அதாவது நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னையும் உன் அண்ணனையும் கழுத்தை நெரித்திக் கொலை செய்து விடுவேன் என்று கார்த்திக் வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பி மிரட்டல் விட்டதும் செரினாவின் அண்ணனான கௌரி ஜனார்த்தன் அண்ணா சாலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 

இதனை அடுத்து காவல் அதிகாரிகள் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மிரட்டல் விடுத்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் நண்பர் இளையராஜா கடந்த 25ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகும் தலைமறைவாக இருந்து வந்த கார்த்திகை தேடும் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபொழுது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஓட்டுநர் கார்த்திக்! இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் படி சென்னை அண்ணாசாலை காவல் நிலைய போலீசார்கள் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர் மேலும் நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

வேலையில் இருந்து நிறுத்திய காரணத்திற்காக ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததும் தற்போது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது இதற்குப் பிறகு செரினா பாதுகாப்பாக இருப்பாரா அல்லது சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் விடுதலை ஆன பிறகு பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவார்களா என்ற சினிமா பாடியினால விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் மிரட்டிய காரணத்திற்காக அவர்களின் மிரட்டலுக்கு அடங்கி போய் வந்தால் எதுவும் நடக்காது நாம் தவறு செய்யவில்லை அதனால் புகார் அளிப்பதிலும் தவறு இல்லை என்று இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட ஷெரினா மற்றும் அவரது அண்ணனுக்கும் ஆதரவாக பல கமெண்ட்கள் பதியப்படுகிறது.