Cinema

சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை...! வெளியானது லால் சலாம் படத்தின் ரிவியூ!

Rjinikanth
Rjinikanth

ஜெயிலர் படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் விக்ராந்த், விஷ்ணு மற்றும் நகைச்சுவை நடிங்கர் செதில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியானது. இதில் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் மொய்தின் பாயாக நடித்திருந்தார். இந்த படத்தின் ரிவியூ ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டில் தள்ளியதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்ததில் இருந்து எந் படத்தையும் இயக்காமல் இருந்ததால் தற்போது லால் சாலம் படம் வெகு நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டது. இன்று வெளியான இந்தபடத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கிரிக்கெட் போட்டியாளராக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் குறித்து வலுவான காட்சி அமைப்புகள் இல்லாதது கதையில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியரான விக்ராந்த் மீது இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் கோபம் கொள்வது போன்ற காட்சிகள் குறியீடாக வைக்கப்பட்டது போலவே தெரிந்தாலும், அதில் சரியான அழுத்தம் இல்லாதது போன்றே திரையில் தெரிகிறது.

விஷ்ணு விஷால் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு செல்வதால் அந்த அணி வெற்றி பெறுகிறது விஷ்ணு விஷால் இருந்த பழைய டீமில் விகாரந் இணைந்ததால் இருவருக்கும் சண்டை அதிகரிக்கிறது. இதனால் அந்த ஊரில் கலவரம் வெடிக்கிறது. இதனை அறிந்த ரஜினிகாந்த் பிரச்சனை தொடர்பாக மொய்தீன் பாய் பாடம் நடத்துவது தான் இந்த படத்தின் கதை நகர்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிக அருமையாக ஒரு தகவலை கொடுத்துள்ளார் அது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க கூடும். 

சொந்த பந்த, உறவை விட்டு பணத்திற்காக ஓடும் மனிதர்களின் வாழ்க்கை, கடவுளை மையப்படுத்தி மனிதர்களே தங்களை பல பிரிவுகளாக பிரித்துக் கொண்டு தேவையில்லாமல் உயர்வு, தாழ்வு கருதி சண்டை போடுவது எல்லாம் முட்டாள்த்தனம் என்பதை கிளைமேக்ஸ் காட்சியில் வசனங்கள் மூலமாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலமாக கொண்டு சேர்த்து இருப்பது சிறப்பான விஷயம். ரஜினிகாந்தின் காதாபாத்திரம் தான் படத்தை நகர்ந்து கொண்டு செல்கிறது. கபில் தேவ் வரும் காட்சி, செந்தில் நடிப்பு, விஷ்ணு விஷால், விக்ராந்த் மோதல் காட்சிகள் என ஏகப்பட்ட பிளஸ்களை படத்தில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

பாசிடிவ் கதை மற்றும் மத நல்லிலக்கணத்தை கொண்டு உருவாக்கிய ஐஸ்வர்யா பல இடங்களில் சொதப்பி இருப்பது அப்பட்டமாக ஸ்க்ரீனில் தெரிகிறது. வசனங்கள் எல்லாம் எதுக்கு இந்த பிளேடு எனும் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் தியேட்டரில் குரல் வருகிறது. ரஜினிகாந்த் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் திரைக்கு சென்றால் ஒரு முறை பார்க்கும் படமாக இருக்கும் என கூறுகின்றனர். இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. சென்னையில் பல தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவு மந்தமாக இருக்கிறது.குறிப்பாக விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சிப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்.

பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரஜினி படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் இருப்பது போல மாஸ் இந்த படத்திற்கு இல்லை என சில ரஜினி ரசிகர்களே சமூகவலைத்தளங்கள் சோகமாக பதிவிட்டு வருகிறார்கள்.  லால் சலாம் படம் வெற்றி பெற்று கல்லா கட்டுமா இல்லை 100 கோடி கிளப்பில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.