
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பான்மை ரசிகர்களை கொண்டவர். மொழி புரிதல் இன்றி பலரும் வடிவேலுவின் நகைச்சுவையை கண்டு சிரிக்காமல் இருந்தது இல்லை. தனது பாடி லாங்குவேஜ் ஒவ்வொரு வசனத்திற்கும் ஏற்றாற்போல் வெளிப்படுத்துவார். இன்று வரை குழைந்தைகளுக்கு இவரது நகைச்சுவை கண்டு சிரிக்கும் அளவிற்கு இருக்கக்கூடும். சினிமாவில் கொடி கட்டி பரந்த வடிவேலு தற்போது உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமில்லாமல் வடிவேலு குறித்து அவருடன் நடித்த நடிகர்கள் சொல்வதுதான் பிரமிக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜ்கிரண் மூலம் சினிமா திரைக்கு வந்தவர் வடிவேல், படிப்படியாக உயர்ந்து விஜயகாந்த் உறுதுணையுடன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். வடிவேல் இருக்கக்கூடிய காதாபாத்திரம் இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று தரும் என்பதில் மாற்றமில்லை. நகைச்சுவை பாத்திரத்தில் இருந்து நடிகனாக நடிக்க மோகம் கொண்ட இவர் 23ம் புலிகேசி மூலம் நடித்து அந்த படமும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பின் இயக்குனர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தால் வடிவேலுவுக்கு டிகர் சங்கம் 10 ஆண்டுகளுக்கு தடை போடப்பட்டது. அதன் பின் நடிகர் சங்கம வடிவேலுவிடம் பேசி சுமுகமான தீர்வுக்கு வந்தது.
தடை நீக்கியபோது அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அந்த படம் பெருசாக பேசப்படவில்லை, காரணம் அவருக்கு நடிப்பு செட் ஆகவில்லை என்ற அளவுக்கு பேச்சுக்கள் எழுந்தது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் கேப்டன் விஜய்காந்துக்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் வடிவேலு மட்டும் கலந்துகொள்ளமல் இருந்தார் இந்த செய்தி கேட்ட மக்கள் வடிவேல் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இனிமேல் அவரின் படத்தை பார்க்கமாட்டோம் என்ற அளவிற்கு சபதத்தை எடுத்து வருகின்றன. ஆண்டு தொடங்கிய விமர்சனம் இன்று வரை முடிவுக்கு வந்தபாடு இல்லை. அந்த வகையில் அவருடன் நடித்த நடிகர்கள் எல்லாம் வடிவேலு மீது சமீபத்தில் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகரும் திரை விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவின் மறுபக்கம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் கொடுக்கும் பேட்டாவில் கமிஷன் அடித்து, அந்த பணத்தில் சரக்கு வாங்கி அடிக்கக்கூடியவர் வடிவேலு. அவர் நினைத்து இருந்தால், அவருடன் சேர்ந்து நடித்த நடிகர்களுக்கு நல்ல சம்பளம் வாங்கி கொடுத்து இருக்கலாம். ஆனால், அதற்குகூட வடிவேலுவிற்கு மனசு இல்லை. ஒரு படத்தில் இயக்குநர் எனக்கு அவர்கூட நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனால், வடிவேலு என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அதே போல தன்னுடன் ஒரு படத்தில் ஒரு நடிகை நடித்துவிட்டால், அடுத்த படத்திற்கு புதியதாக ஒரு நடிகை வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவருக்கு ஈசிஆரில் ஒரு பண்ணை வீடு இருக்கு, அந்த பண்ணை வீட்டிற்கு நடிகைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார். என்ன படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தாலும், மாலை 6 மணி ஆனால் போதும், தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகையை அழைத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்கு சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல், அந்த நடிகைகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ளக்கூடியவர் வடிவேலு. உதவி என்று கேட்டால் உதவாத கஞ்சன். மற்றவர்களுக்கு உதவி செய்த விவேக், மயில்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். ஆனால், கல் மனசுக்காரன் கஞ்சன் நல்லாத்தான் இருக்காரு, அவரை ஆண்டவன் நல்லாத்தான் வெச்சி இருக்காரு கொஞ்சமாவது உதவி செய்யும் எண்ணம் இருக்க வேண்டும் என்று பயில்வான் கூறியுள்ளார். வடிவேலு மீது ஏற்பட்ட விமர்சனம் இன்றும் வந்து கொண்டிருக்கு என்பதில் மாற்றமில்லை.