Cinema

டிடி செய்த செயலால்...கடுப்பான ஜப்பான் கார்த்தி!

surya , karthi
surya , karthi

நடிகர் கார்த்தியின் 25வது படம் ஜப்பான் ராஜு முருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ஜப்பான் படம். இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேலும், சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


கார்த்தி, ராஜுமுருகன் , ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு என பலர் கலந்து கொண்டனர். ட்ரைலரை காணும்போது ஒரு குட்டி மீனு, அந்த மீனுக்கு 10 வயசு என்று சிறுத்தை படத்தில் பார்த்த கார்த்தியின் சாயல் இந்த டிரைலரில் தெரிகிறது. இதனை முழுமையாக பார்த்தவர்கள் வழக்கமான திருடன், போலீஸ் கதைக்களமாக தான் இருக்கும் என்று தெரிவித்தனர்.இசைவெளியீட்டு விழாவின் நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர்களான டிடியும், மா கா பா ஆனந்தும் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த விழாவை தொகுத்து வழங்கியதில் டிடி செய்த செயலால் நடிகர் கார்த்தி கடும் கோபத்தில் உள்ளாராம். 

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றியை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அதிலும் கடைசியாக கார்த்தி நடித்த விருமன் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது கார்த்தி நடித்த ஜப்பான் படம் அவருக்கு ரொம்ப ஸ்பெஷல் படமாகும். ஏனெனில் இது கார்த்தியின் 25வது படம் அதனால் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சூர்யா. ஜப்பான் படத்தின் ட்ரைலரையும் சூர்யா தான் வெளியிட்டார். இந்த விழாவில் பல்வேறு நடிகர்களை அழைத்து வந்து ஜப்பான் படத்திற்கு புரோமோட் செய்யலாம் என்று எண்ணிய கார்த்திக்கு தொகுப்பாளர் டிடி தலைகீழ் மாத்திவிட்டாராம்.அதாவது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நபரை கடைசியில் தான் மேடையில் பேச அழைப்பார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் முன்னதாகவே டிடி அழைத்து சூர்யாவை பேச வைத்ததால், நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து சூர்யாவின் பேச்சை கவனித்து ஆரவாரம் செய்தனர்.அதன் பிறகு பேச வந்த படத்தின் கதாநாயகன் கார்த்தி, மேடையில் நின்று பேசும்போது ரசிகர்கள்  பாதி பேர் தான் இருந்தார்களாம். அண்ணனின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் சூர்யா பேசியதும் கிளம்பியதால் கார்த்தி மற்றும் பிற பிரபலங்கள் பேசுவதை கான ரசிகர்கள் குறைவாகவே உள்ளதால் நடிகர் கார்த்தி தொகுப்பாளர் மீது முகம் சுழிக்கும் அளவிற்கு மாறியுள்ளாராம்.

இந்த தீபாவளிக்கு ஜப்பானுக்கு போட்டியாக  ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. இந்த தீபாவளிக்கு யார் வெற்றி பெறுவார் என்பது ரசிகர்ளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மூன்று வருடங்களுக்கு முன் தீபாவளியின் போது விஜய் நடிப்பில் வெளியான பிகில் படமும், கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படமும் ரேஸில் போட்டியிட்டு கார்த்தியின் கைதி படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது