தமிழகத்தில் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்தினை ஆழமாக பதிவு செய்பவர் கார்ட்டூனிஸ்ட் பாலா, ஆளும் கட்சிகளை எதிர்த்து பல்வேறு கார்ட்டூன்களை வெளியிட்டு தனது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்து வந்துள்ளார்.
ஆனால் தற்போது மாநிலம் முழுவதும் பதற்றத்தை உண்டாக்கியுள்ள பெட்ரோல் வீச்சு சம்பவம் குறித்து பாலா பதிவிட்டுள்ள கருத்து இங்கு ஒரு குத்து அங்கு ஒரு குத்துமாக உள்ளது, முகநூலில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலா,தங்கள் வாகனத்துக்கு .. தங்கள் வீடுகளுக்கு தாங்களே வெடிகுண்டு வீசி சங்கிகள் கலவரத்தூபம் போட சதி செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
அதற்கு நடுவே இஸ்லாமிய அமைப்பினரும் பெட்ரோல் குண்டுவீசியிருக்கும் தகவல் வெளியாகிறது வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுபோன்ற இஸ்லாமியர்களின் எதிர்வினைக்காகதான் சங்கிகள் வா.. ராஜா. வா.. என்று காத்திருக்கிறார்கள்.. அதற்காகதான் சீண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த எதிர்வினைகளை காட்டிதான் அவர்கள் எல்லா இடங்களிலும் வளர்கிறார்கள்.
இஸ்லாமிய சகோதரர்களே.. சங்கிகள் விரிக்கும் வலையில் போய் சிக்காதீர்கள் என பாலா குறிப்பிட்டுள்ளார்.அதாவது பொதுமக்கள் உடமைகளை சேதப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக சமூக விரோத செயலில் ஈடுபட்டுள்ள நபர்களை நேரடியாக கண்டிக்க மனமில்லாத பாலா போன்றவர்கள் வலையில் சிக்கவேண்டாம் என குறிப்பிட்டு இருப்பது மேலோட்டமாக நானும் கண்டித்தேன் என கூறுவதற்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர உண்மையான சமூக மாற்றத்திற்கு உதவாது என பலரும் பாலா கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாஜககாரன் அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டு ஏமாற்றுகிறான் என்றால் கடந்த மூன்று நாட்களாக பிடிபட்ட நபர்கள் யார் அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் நேரடியாக குற்றம் செய்தவர்களை மக்கள் முன்பு அடையாளம் காட்ட துப்பு இல்லை என்றால் ஏன் கண்துடைப்பு கண்டிப்பு நாடகம் நடத்தவேண்டும் எனவும் தமிழர்கள் பலரும் கார்ட்டூனிஸ்ட் பாலா கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.