முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஒரு கருத்தை கூறினால் அதற்கு எதிர்ப்பு என்பது மற்றொரு அரசியல் கட்சிகள், அல்லது குற்றம் சுமத்தியவர்கள் பக்கம் இருந்து வரும், ஆனால் தற்போது சமூகவலைத்தள காலம் என்பதால் பொதுவான நபர்களும், சமூக வலைத்தள பிரபலங்களும் உடனடியாக கருத்து தெரிவித்து விடுகின்றனர்.
இது சாமானிய மக்கள் வரையில் கொண்டு செல்லப்பட்டு விடுகிறது, அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா இந்துக்கள் குறித்து தெரிவித்த கருத்திற்கு கடுமையாக பல்வேறு தரப்பில் இருந்து வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார், பல அரசியல் கட்சி தலைவர்கள் ராசா பேச்சை கண்டித்து வரும் வேலையில் சமூக வலைத்தளத்தில் வணக்கம் டா மாப்பிளை எனும் டயலாக் மூலம் பிரபலமான நபர் ராசாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், இந்த பதிவு யாருக்கு என்றால், தி.மு.க.வில் உள்ள என் செல்லகுட்டி ஆ. ராசாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இப்பதான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறார்கள். அவர்களை, எல்லாம் அசிங்கமாக திட்டாதீர்கள். எனக்கே, ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவர்கள், ஒரு பெண் ஏன்? அவர்களை இப்படி திட்டுகிறீர்கள்.
அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.உன் கட்சியில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு முதலில் அதனை போய் பார் அண்ணே. நல்லவேளை தமிழில் பேசியதால் ஸ்டாலின் அண்ணன் உன்னை விட்டு விட்டார். இதே பேச்சை வடநாட்டு பக்கம் நீ ஹிந்தியில் பேசியிருந்தால் விளக்குமாறு பிஞ்சி போயிருக்கும். உன்னை சோலியை முடித்து இருப்பார்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது... ஆ. ராசாவிற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் அதிகரித்து வரும் வேலையில் இனியும் திமுக அமைதியாக இருப்பது வரும் தேர்தலில் திமுகவிற்கு பலத்த அடியை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வணக்கம்டா மாப்ள ராசா ஹிந்தியில் பேசி பாருடி pic.twitter.com/JAAfQAkxyU
— Alagurajan (@alagu2512) September 22, 2022