
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படுபவர். வருடத்திற்கு ஒரு முறை படங்களை வெளியிடும் அஜித்குமாருக்கு தமிழ்நாட்டு முழுக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் இறந்த செய்தி கேட்டு முதல் ஆளாக அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். விஜயகாந்த் இறப்புக்கு ஏன் செல்லவில்லை என விமர்சகர் அதிரடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் தனித்துவம் வாய்ந்தவர் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டார். மற்ற நடிகர்கள் மறைவுக்கு செல்ல மாட்டார். அப்படி இருக்க சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த் இறப்புக்கு அவர் செல்லவே இல்லை. கூட்டத்தில் வந்து விஜய் பார்த்து சென்றது, அஜித் ரசிகர்களிடம் கோவத்தை ஏற்படுத்தியது. அப்போது அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்ததால் அந்த நேரத்தில் அஜித் பப்பில் டான்ஸ் ஆடியது சர்ச்சையாக மாறியது. ஜெயலலிதா இறப்புக்கு அவசர அவசரமாக இரண்டு ப்ளைட் மாறி வந்தவர். விஜயகாந்துக்கு அப்படி ரிஸ்க் எதுவும் எடுக்கவே இல்லை.
வெற்றி துரைசாமி மறைவுக்கு வந்த அஜித்குமார், விஜயகாந்த் வீட்டிற்கு இதுவரை சென்று இரங்கல் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர், அஜித் தன்னுடைய விஷயங்களில் அவரே முடிவெடுப்பவர். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் அதை செய்யவே மாட்டார். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை என எல்லாரும் பேசிக்கொண்டே இருக்கின்றனர். இது அவருக்கு கடுப்பை தான் தந்து இருக்கிறது. அதனால் 100 சதவீதம் அஞ்சலி செலுத்த நேரில் செல்ல வாய்ப்பே இல்லை. அதான் கால் செய்து அவர் குடும்பத்தினருடன் பேசிவிட்டாரே. அதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. அவருக்கும் விஜயகாந்துக்கும் எதோ பிரச்னை என்கின்றனர். அப்படி எல்லாம் இல்லை.
நடிகர் சங்கம் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுத்தது. ஆனால் அஜித் அங்கிருப்பவர்களும் நம் மக்கள் ஏன் அவங்க காசை நாம பிடுங்கணும். ஒரு கோடி கலெக்ட் ஆகும் தானே. இந்தாங்க என் பங்கு 10 லட்சம். இப்படி ஒரு 10 நடிகர்களிடம் வாங்கினால் போதும் என்று விஜயகாந்திடம் சொல்லி சென்றாராம். ஆனால் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் நிகழ்ச்சியை நடிகர் சங்கம் நடத்தியது. இருந்தாலும் அஜித்தினை நினைத்து விஜயகாந்த் பெருமை தான் பட்டாராம். அவர் மீது எந்த கோபமுமே இல்லையாம். கிட்டத்தட்ட தன்னை போல மக்களிடம் அஜித்துக்கும் அன்பு இருப்பதாகவே என்னிடம் பேசிக்கொண்டு இருப்பார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனாலும், இவரது பேச்சை மதிக்காத அஜித் ரசிகர்கள் அஜித் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். வடிவேலுவையும் சேர்த்து திட்டி வருகிறார்கள். அஜித் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்து வெற்றி துரைசாமி இறப்புக்கு வரமுடிந்தது என கேள்வி முன்வைக்கின்றனர். இதுவரை விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்ல வில்லை குறிப்பாக, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை தொலைபேசியில் மட்டும் இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.