சூரத்தில் பிறந்து மிஸ் சூரத் பட்டம் பெற்ற பிறகு மிஸ் இந்தியா காம்பெட்டிஷனில் இரண்டாவது இடத்தை பிடித்து 2000 முதல் 2010 த்திற்கு இடைப்பட்ட காலத்தில் இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமிதா! தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான நமிதா முதலில் ஹிமானி க்ரீம், ஹேண்ட் ஷோப்,. அருண் ஐஸ் கிரீம் மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து கவனம் பெற்றார் அதற்கு பிறகு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தமிழில் கேப்டன் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இவர் முதன் முதலாக அறிமுகமான எங்கள் அண்ணா திரைப்படமே நல்ல வரவேற்பு அவருக்கு பெற்றுக் கொடுத்தது ஆனால் அதற்குப் பிறகு அவரது உயரம் மற்றும் தோற்றம் சற்று முதிர்ந்த வயதை காட்ட சத்யராஜ்,. அர்ஜுன்,. பார்த்திபன் மற்றும் சரத்குமார், சுந்தர் சி போன்ற அவர்களுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது அதனால் விஜய் மற்றும் அஜித் போன்ற அக்கால கட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை!
இருப்பினும் சரத்குமார் உடன் இணைந்து நமிதா நடித்த ஏய் திரைப்படம் நமீதாவிற்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அதிலும் குறிப்பாக இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலேயே இவர்கள் நடித்துள்ளதால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு! அதுமட்டுமின்றி ஹெ மச்சான் என்ற ஒரு டயலாக் நமிதாவின் புகழானது அவர் செல்லும் மேடைக்கு மேடை ஒழித்தது! இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நடிகராக விளங்கி வந்த விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரோடு நடிக்கும் வாய்ப்பு நமீதாவிற்கு கிடைத்தது அதற்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் நடன ஷோவின் நடுவராக இருந்து வந்த நமிதா 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தற்போது அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகவும் பிசியாக இருக்கும் நமிதா சினிமாவில் இருந்த பொழுது ஒரு படத்தில் ஹீரோவாக ஒருவரை சொல்லிவிட்டு பிறகு படத்தின் பொழுது வேறொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்தார்கள் அதை தெரிந்த உடனே நான் அந்த படத்தில் இருந்து விலக நினைத்தேன் ஆனால் எப்படியோ என்னை அடிக்க வைத்து விட்டார்கள் என்று நமிதா கூறியுள்ளது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது . அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் நடிப்பதற்கு நான் ஒப்பந்தமாக இருந்தேன். முதலில் அந்த படத்தில் எனக்கு கதாநாயகனாக நடிகர் தனுஷ் தான் நடிக்கப் போவதாக கூறி என்னை புக் செய்தார்கள் ஆனால் படம் துவங்கிய பிறகு அதில் தனுஷ் நடிக்கவில்லை மாறாக வேறொரு நடிகர் தான் நடித்தார் நான் அந்த படத்தின் பெயர் மற்றும் நடிகர் குறித்த தகவல்களை கூற விரும்பவில்லை,
இதை நான் தெரிந்த உடனே அந்த படத்தில் இருந்து விலக முற்பட்டேன் ஆனால் எப்படியோ அந்த படத்தில் என்னை அவர்கள் நடிக்க வைத்து விட்டார்கள் இதனால் தனுசுடன் நடிக்கும் வாய்ப்பை நான் எழுந்து விட்டேன் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நமிதா கூறியுள்ளார். நமிதாவின் இந்த கருத்திற்கு சமூக வலைதளத்தில் நமிதா கூறும் அந்த திரைப்படம் நீ வேணும்டா செல்லம் என்கிற திரைப்படம் தான் அந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் தான் நடிகராக நடித்திருந்தார் ஒருவேளை இவரைக் குறித்தும் இந்த படத்தைக் குறித்தும் தான் நமீதா பேசி இருக்கிறார் என்று கமெண்ட்கள் எழுந்துள்ளது.