Cinema

நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை... கசிந்த ஷாருக்கானின் ரகசியங்கள்....

SHAH RUKH KHAN
SHAH RUKH KHAN

கோலிவுட் எந்த அளவிற்கு ரஜினி கமல் போன்ற நடிகர்கள் பிரபலமாகவும் அதிக ரசிகர்களையும் கொண்டுள்ளார்களோ அதே அளவிற்கு பாலிவுட் உலகத்தில் ஒரே பிரபல நடிகராகவும் அதிக அளவில் ரசிகர்களை பெற்ற ஒருவராகவும் இருந்து வருபவர் தான் ஷாருக்கான்!! இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதிக அளவில் ரசிகர்களை இன்றளவிலும் பெற்று வருகிறது. மேலும் இவர் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் இணைந்து வாங்கியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பது தொடங்கி ஒரு தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுப்பாளராகவும் தற்போது ஐபிஎல் போட்டியின் ஒரு அணியை வாங்கி பல துறைகளில் தனது பணியினை சிறப்பாக செய்து வருகிறார் பிரபல நடிகர் ஷாருக்கான்!! மேலும் இவரின் நடிப்பால் அதிக அளவு மக்களின் மனதில் இடம் பிடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று பாலிவுட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து வருகிறார்!!


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட்டை காண ஷாருக்கான் அகமதாபாத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் நிலவும் வெப்பத்தின் அளவானது 45 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வந்துள்ளது. இதனால் நீரிழிப்பு நோயால் ஷாருக்கான் அவதிப்பட்டார் என்றும், வெப்ப வாதம் என கூறப்படும் கிட்ஸ் ஸ்ட்ரோக்கால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வானதை தொடர்ந்து கொல்கத்தா அணியில் உள்ள வீரர்களுக்கு ஐ டி சி  நர்மதா  ஹோட்டலில் சிறப்பான வரவேற்பை சமீபத்தில் ஷாருக்கான் கொடுத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று இவ்வாறு ஷாருக்கான்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகிய உடன் அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் திரையுலகில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஷாருக்கான்  அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருவார்கள் என்பதால் அந்த மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது பிரபல  பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கு எந்த ஒரு ஆபத்தான நிலைமையும் கிடையாது என்றும் அவர் தற்பொழுது நலமாக இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் அவரின் உடல் நிலையானது தற்பொழுது சீராக இருக்கிறது என்றும், உடல்நிலை சரியாகும் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ஷாருகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் நடிகர் ஷாருக் கான் அவர்களின் உதவியாளரான ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக்கானின்  ரசிகர்கள் மற்றும் வெல்விஷர்கள் அனைவருக்கும் நன்றி என்றும், ஷாருக்கான் தற்பொழுது நன்றாக இருக்கிறார்!!மேலும் உங்கள் அனைவரின் அன்பிற்கும், பிரார்த்தனை மற்றும் அக்கரைக்கும் மிகவும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். எனவே தற்பொழுது ஷாருக்கான் நலமாக இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றனர். மேலும் தற்போது இது திரை உலகத்திலும், சினிமா வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்படும் ஒரு செய்தியாக இருந்து வருகிறது.  இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!!