நடிகர் கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிராமங்கள் வரை தற்போதைய இளைஞர்கள் மனதிலும் சென்று இருக்கிறார் என்றே கூறவேண்டும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கமல் திடீர் என்று மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கினார்.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை தழுவினார் கமல், இந்த முறை எப்படியாவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து இருக்கிறாராம் அதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கமல் தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 10 இடங்களை குறைத்து அதில் ஒன்று கமலுக்கும் மற்றொன்று தேமுதிகவிற்கும் ஒதுக்க இருக்கிறார்களாம்,கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு புதுவை உட்பட 10 தொகுதிகளை, தி.மு.க தலைமை ஒதுக்கியது.
அதில், ஒன்பது தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.இந்த தேர்தலில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாத நிலை, தி.மு.க., கூட்டணிக்கு உள்ளது பிரதமர் வேட்பாளராக ராகுலை முன் மொழிந்தால் கூட்டணியில் பாதிப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
எனவே, காங்கிரசுக்கு கடந்த முறை போல், 10 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., விரும்பவில்லை. கூட்டணியில் கூடுதல் கட்சிகளை இணைத்து ஆட்சிக்கு எதிரான மன நிலையை கூட்டணிகள் மூலம் வலு சேர்க்க நினைக்கிறது.எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று கொடுப்பது குறித்து, தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் கமல் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க., இளைஞரணி தலைவர் சுதீஷ் போட்டியிடும் வகையில், கூட்டணி பங்கீடு நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அடிமாட்டு விலை கேள்வி பட்டு இருப்போம் ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக ஒரு இடத்திற்கும், மாற்றத்தை உருவாக்குவோம் மையத்தை நிறுவுவோம் என வீரவசனம் பேசிய கமல் போன்றோர் ஒரே ஒரு இடத்திற்கு ஆலோசனை நடத்துவதாக வரும் செய்திகளால் அரசியல் பிக் பாசிடம் மண்டியிட்ட சினிமா பிக் பாஸ் என எதிர்தரப்பை சேர்ந்த பாஜகவினர் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.