Cinema

வசமாக சிக்கிய சித்தார்த் … பட வாய்ப்புக்காக புது நாடகத்தை அரங்கேற்றிய பரிதாபம்..!

Actor Siddharth
Actor Siddharth

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிக்கு ஆதரவாக சில நடிகர்கள் குரல் கொடுப்பார்கள், அரசியல் கட்சிகளுக்கு எதிராக சில நடிகர்கள் குரல் கொடுப்பார்கள் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு நடிகர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


அதில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர் பிரதமர் மோடி தொடங்கி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என பாஜகவை கடுமையாக. எதிர்த்து வந்த சித்தார்த், ஒரு கட்டத்தில் விளையாட்டு வீராங்கனை சாய்நனா நெக்வாலை இரட்டை அர்த்தத்தில் விமர்சனம் செய்ய கடும் எதிர்ப்பு கிளப்பியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சில காலம் சமூக வலைத்தளங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

இந்த சூழலில்தான் நடிகர் சித்தார்த் திடீர் என்று மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேச கட்டாய படுத்தியதாக குறிப்பிட்டு ட்விட் செய்தார் சித்தார்த் இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இதன் பின்னணி வெளியாகி இருக்கிறது, சமீபத்தில் பறந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என சித்தார்த் உள்ளிட்ட சிலர் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியதாக செய்தி வெளியானது.

இது உதயநிதி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது, ஏற்கனவே பறந்தூர் விமான நிலைய விவாகரம் உள்ளூரில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி வரும் நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் சித்தார்த் போன்றோர் செயல்படுகிறார்கள் என அதிருப்தி உண்டாகிய நிலையில் அதனை சமாளிக்க சித்தார்த் இந்தி விவாகரத்தை கையில் எடுத்து மீண்டும் உதயநிதியின் குட் புக்கில் இடம்பெற நினைப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

சித்தார்த் திமுகவை எதிர்த்தால் தமிழ் படங்களில் நடிப்பது கடினம் எனவும் மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தல் கணக்குகள் போல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்புகள் கிடைக்காது போன்ற காரணத்தால் சித்தார்த் இந்தி விவாகரத்தை கையில் எடுத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுக்கின்றன, ஆனால் முன்பு போல் சித்தார்திற்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் மக்களும் சித்தார்த்தின் இந்தி நாடகத்தை பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம்.

பழைய டெக்நிக் மாற்றாமல் இன்னமும் இந்தி எதிர்ப்பு ஆங்கில ஆதரவு என சென்றால் மக்கள் மயங்க மாட்டார்கள் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் சித்தார்த் செயல்படுகிறாரே