சமீபத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழை பொழிந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் முழுமையாக எங்களை கண்டுகொள்ளவில்லை மேட்டரும் நடிகர்கள் யாரும் உதவி செய்யாமல் இருந்தது மக்கள் இடத்தில் கோபம் அதிகரித்தது. இந்த வேலையில் விஜய் செய்தது மேலும் நெருக்கடியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக விஜய் நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம் என்பது போல் கடுமையாக சாடியுள்ளாராம்.
மிக்ஜாம் கனமழையால், சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையயும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் மக்கள் பாதித்த போது மக்களை விஜய் கண்டுகொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. அப்போது சைலண்டாக விஜய் இணையத்தில் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி பதிவை போட்டு விட்டு சென்றார். இதனால் கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் விஜய் ஏன் நிவாரண தொகையை அறிவிக்கவில்லை என விமர்சனமும் அவர் மீது எழுந்தது.
இதனையெடுத்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கிடையே சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவளித்தனர். அப்போது, நிர்வாகி ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை விளம்பரத்திற்குப் பயன்படுத்தியதாக சர்ச்சையானது. இந்த சம்பவம் விஜய் காதுக்கு செல்ல உடனடியாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடுமையாக டோஸ் விட்டாராம். " என்னுடைய புகைப்படத்தை வைத்து விளம்பரம் தேடாதீர்கள் எனவும் நாம் செய்தது மக்களுக்கு தெரிந்தால் போதும் என கடித்துள்ளாராம்". இதனை அப்படியே மன்ற நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்க ரசிகர்களும் தலையை ஆட்டிவிட்டு சென்று விட்டார்களாம்.
இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், " சென்னையில் 25 இடங்களில் மருத்துவ முகாமை விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக ஏற்படுத்தப்படுள்ளது. முகாம் டிச.,14ம் தேதி வரை நடக்கவுள்ளது இதில் விஜயின் புகை படம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்'' என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனால் சினிமா வட்டாரத்தில் அப்போதும் அந்த மருத்துவ முகாம் ரசிகர்கள் தலையில் தான் கட்டுகிறார்கள் விஜய் ஏதும் தொகை கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் மேலும், விஜய் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வந்தாலும் அப்போதும் கூட விஜய் பாக்கெட்டில் இருந்து எந்த தொகையும் கொடுக்கமாட்டார். மாவட்டத்தில் உள்ள மக்கள் மன்றத்தின் சார்பாக தான் செலவுகளை செய்ய சொலவர் என்பது இப்போது விஜய் நடந்துகொள்ளும் செயல் முலமாக தெரிகிறது என விமர்சனம் எழுந்துள்ளது.