Technology

புதிய அறிவிப்பை வெளியிட்ட ஜி பே, சேவை ரத்து செய்யப் போகிறதா!!

G Pay
G Pay

வளர்ந்துள்ள அறிவியல் மற்றும் இன்டர்நெட் உலகில் இன்டர்நெட் பேங்கிங் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது வீட்டிலிருந்து படியே அனைத்து வேலைகளும் மிகவும் எளிதாக செய்யப்படுகிறது பிறந்த குழந்தைக்கு கூட பிறப்புச் சான்றிதழை வீட்டிலிருந்த படியே பெற முடியும், பிரஷ்ஷான காய்கறிகளை வீட்டிலிருந்தே படியே எளிமையாக ஆடர் செய்து வாங்கி விட முடியும் அதற்கு பேமெண்ட் செலுத்துவதற்கும் எங்கும் அலய தேவை இல்லை ஆன்லைன் மொபைல் பேமெண்ட் வசதிகள் மூலைக்கு மூலை உள்ளது சாதாரண பெட்டி கடையில் கூட தற்போது ஆன்லைன் பேமண்டை பார்க்க முடிகிறது அதற்கான க்யூ ஆர் கோடுகளும் கனகச்சிதமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பேமென்ட் நம் நாடு தொடங்க வேண்டும் நம் நாட்டில் டிஜிட்டல் பேமென்ட் ஒரு புதிய உச்சத்தை தொட வேண்டும் என்ற தொலைநோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நினைத்தது தற்போது நிறைவேறி உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்த வருகிறோம். 


அந்த வகையில் டிஜிட்டல் பேமென்ட்டின் மிக முக்கிய ஆன்லைன் பேமெண்ட் தளமாக விளங்கி பல வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளர்களின் முதல் சாய்ஸாக உள்ள செயலிதான் கூகுள் அறிமுகப்படுத்திய ஜி பே, google அறிமுகப்படுத்திய பல சாதனங்களில் இந்த செயலியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வந்தது. ஏனென்றால் டிஜிட்டல் பேமென்ட் என்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஜிப்பே ஆனது பலரது முதல் தேர்வாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த ஜிப்பே மூலம் தனது காண்ட்டக்டில் இருப்பவருக்கும் காண்டாக்ட் இல்லாதவருக்கும் மொபைல் நம்பர் மூலமாகவே பணத்தை அனுப்ப முடிகிறது அது மட்டும் இன்றி இபி பில் டிக்கெட் புக்கிங் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பல பேமெண்ட்களும் இந்த செயலி மூலமே எளிமையாக செலுத்த முடிகிறது அதோடு இந்த செயலி இதுவரை அருமையாகவும் எந்த வித பாதிப்பையும் பயனாளிகளுக்கு ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருவதும் அதிக பயனாளர்கள் இந்த ஜிப்பேவை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்! ஆனால் வருகின்ற ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு ஜி பே சேவை கூகுள் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதாவது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆன்லைன் சேவைக்கு முக்கிய செயலியாக விளங்குகின்ற google-யின் google pay இனி இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மட்டுமே தனது சேவையை இயக்க உள்ளதாகவும் ஜூன் நான்கு 2024 க்கு பிறகிலிருந்து அமெரிக்காவில் கூகுள் பே இனி தனது சேவையை தொடங்காது என்றும் அங்கு கூகுள் பே தடை செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மற்ற நாடுகளுக்கும் தனது சேவையை முற்றிலுமாக கூகுள் நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஆனால் அவர்கள் அனைவருமே கூகுள் வாலட்டிற்கு மாற்றப்படுவார்கள் என்றும் அமெரிக்காவில் google pay-வின் சேவையானது முற்றிலும் முடக்கப்பட்டு இனி அமெரிக்கப் பயனாளர்கள் யாராலும் பணத்தை பெறவும் செலுத்தவும் முடியாது என்றும் கூகுளை பயன்படுத்தி வரும் அமெரிக்க பயனாளர்கள் கூகுள் வாலட்டிற்கு மாற வேண்டும் என்ற வேண்டுகோளையும் கூகுள் நிறுவனம் முன் வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி இனி கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தி பிரபலப்படுத்துவதற்காகவே கூகுள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி கிட்டத்தட்ட 180 நாடுகளில் ஜி பே google வாலட்டாக மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனமே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த மாற்றமும் இந்த புதிய அறிவிப்பும் இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு பொருந்தாது என்றும் நம்பப்படுகிறது ஏனென்றால் இந்த இரு நாடுகளிலும் ஜி.பே சேவையை கூகுள் தொடர்ந்து இயங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.