
தமிழ் திரைப்படங்களில் அனைவரையும் சிரிக்க வைக்கும் பாடி லாங்குவேஜ் உடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ள நடிகர் தான் ரெடின் கிங்ஸ்லி!! மற்ற காமெடி நடிகர்கள் பேசுவதும் இவர் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் திரைப்படங்களில் காமெடிகளை கொஞ்சம் சத்தமாக கூறி அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார். முதலில் நடன கலைஞராக இருந்த இவர் அதன் பிறகு அவள் வருவாளா என்னும் திரைப்படத்தில் வரும் பாடலில் இடம்பெற்று இருந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நீண்ட காலத்திற்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
அதில் இவர் பேசும் பாவணையால் அனைவரும் இவரை கவனிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நெற்றிக்கண், டாக்டர் மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் இவரின் வித்தியாசமான பேச்சு மற்றும் காமெடிகள் போன்றவை அமைந்திருந்தது. இந்தத் திரைப்படங்களில் எல்லாம் அவர் வரும் காட்சிகள் சூப்பராக ஹிட் கொடுத்தது. இதனால் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து மேலும் வடிவேலுவின் நாய் சேகர் என்னும் திரைப்படத்திலும் தொடர்ந்து நடித்தார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி தொலைக்காட்சியில் நடித்து வரும் சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல விமர்சனங்களையும் பெற்று வந்தது. தற்போது அந்த விமர்சனங்களுக்கு ஒரு பேட்டியில் சங்கீதா சரியான பதிலடி கொடுத்துள்ளார்!! அது என்னவென்றால்!!
இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து முதலில் ஏதோ ஷூட்டிங் என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் இது உண்மையான திருமணம் தான்!! இவர்கள் இருவரும் பத்து வருட காலமாக காதலித்து உள்ளதாகவும், மைசூரில் அமைந்துள்ள ஒரு கோவிலில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ரெடின் கிங்ஸ்லி இது முதல் திருமணம்!! ஆனால் சங்கீதாவிற்கு இரண்டாவது திருமணம் என்றும் ஏற்கனவே சங்கீதா திருமணமாகி விவாகரத்து ஆனவர் மேலும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்றும் பல விமர்சனங்கள் சோசியல் மீடியாக்களில் தோன்றிய வண்ணமே இருந்தது. மேலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை கருத்தில் கொண்டும் பலர் இந்த வயதில் எதற்கு திருமணம் என்றால் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சங்கீதா சமீபத்தில் கொடுத்த பேட்டையில் இவை அனைத்திற்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்!! அவர் கூறியிருப்பது என்னவென்றால்...!!!சங்கீதாவிற்கு ஒரு மகள் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலானதே தொடர்ந்து அந்தக் குழந்தை தனது சகோதரியின் குழந்தை என விளக்கம் அளித்துள்ளார். மேலும் லேட் மேரேஜ் என்றும், இந்த வயதில் கல்யாணம் முக்கியமா? என்ன பரவி வந்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக நாங்கள் இருவருமே மனதளவில் எனக்கு 18 வயது போலவும், அவருக்கு 22 வயது போலவும் தான் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால் இங்கிருக்கும் மக்களால் தான் அதனை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. காரணமாகவே நாங்கள் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடலாம் என்று கூட பல சமயம் நினைத்திருக்கிறோம். மேலும் அவரையும் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒன்றும் திருமணம் செய்யவில்லை. நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை!! அவரின் அரவணைப்பு எனக்கு பிடித்திருந்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டோம் என்று பேட்டியில் கூறியுள்ளார்!!!