தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த டேனியல் பாலாஜி கடந்த மார்ச் 29ம் தேதி உயிரிழந்தார். சிறுவயதிலிருந்தே திரையுலகத்திற்கு செல்ல வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் கொண்வராக இருந்துள்ளார். அதனால் சென்னையில் உள்ள தரமணி திரைப்பட நிறுவனத்தில் திரைப்பட இயக்கப் படிப்பை படித்தார். இவருடைய அம்மாவும், நடிகர் முரளியின் அம்மாவும் சகோதரிகள் ஆவார்கள். எனவே நடிகர் முரளி இவருக்கு அண்ணன் ஆவார். மேலும் முரளியின் மகன் அதர்வா டேனியல் பாலாஜியின் மருமகன் ஆவார். மேலும் சித்தலிங்கையா இவரின் மாமா ஆவார். 1998 ஆம் ஆண்டு கமலஹாசனின் வெளி வராத மருதநாயகத்தின் யூனிட் புரடக்ஷன் மேனேஜராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து தாமதமான காமராசு படத்தின் உதவி இயக்குனராகவும் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
ராதிகா நடிப்பில் பிரபலமான சின்னத்திரை தொடரான சித்தி என்னும் சீரியலில் டேனியல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவரின் நடிப்பால் அனைவரையும் இவர் அதிக அளவில் ரசிகர்களை அந்த சீரியலின் மூலம் பெற்று வந்தார். அந்த சீரியலில் இவரின் பெயர் டேனியல் என்பதால் அதன் பிறகு அனைவரும் இவரை டேனியல் பாலாஜி என்றே அழைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அழகி என்னும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். நடிகை ராதாவின் சித்தி என்னும் சின்னத்திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, சினிமாவிலும் வில்லன் கேரக்டரில் அசத்தி வந்தவர் தான் இந்த டேனியல் பாலாஜி. முதல் முதலில் 2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து காக்க காக்க,கொள்ளாதவன், பைரவன், வேட்டையாடு விளையாடு போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு என்னும் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அதிக அளவில் ரசிகர்களை பெற்று வந்தது. டேனியல் பாலாஜியின் குரலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது அந்த அளவிற்கு வில்லன் கேரக்டரில் அசத்தி வரும் நடிகர் ஆவார். வில்லனாக தனது நடிப்பால் பல படங்களில் மிரட்டி வந்த நடிகர் டேனியல் பாலாஜி சென்னையில் உள்ள ஆவடியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கட்டியுள்ளார். இந்தக் கோவில் தனது அம்மாவின் ஆசைக்காக அவர் கட்டிய கோவிலாகும். சமீபத்தில் கூட அதற்கான கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இன்னொரு பல நல்ல விஷயங்கள் செய்து கொண்டு வந்த டேனியல் பாலாஜி தற்போது திடீரென்று மாரடைப்பால் உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து அவரின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு இவரின் மரணம் மாரடைப்பால் தான் நிகழ்ந்துள்ளது என்று உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து திரையுலகத்தில் உள்ளவர்கள் பல கருத்துக்களை எழுப்பி வந்தனர். இவர் புகைப்படத்திற்கு மிகவும் அருமையானவர் என்றும் அதனால் தான் இவருக்கு இப்படி மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என்றும் பல கருத்துக்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர்.
இவரைக் குறித்து கௌதம் வாசுதேவன் கூறி இருப்பது என்னவென்றால், ஆன் திஸ் பாட்டில் எந்த ஒரு ரிகர்சலும் பார்க்காமல் கொடுத்த டயலாக்கை பேசும் ஒரே நடிகர் என்றால் அது டேனியல் பாலாஜி தான் என்று புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் கேஜிஎப் படத்தில் நடிக்க கூப்பிட்ட போதும் அதற்கும் போகவில்லை, வெற்றிமாறன் அவர்கள் கூப்பிட்ட போது போகவில்லை ஆனால் கடைசியாக என் திரைப்படமான துருவ நட்சத்திரத்தில் தான் நடித்துள்ளார் என்று மேனன் கூறியுள்ளார். இதற்கு முன்னர் கௌதம் வாசுதேவனுடன் சேர்ந்து வேட்டையாடு விளையாடு, காக்க காக்க என்னும் திரைப்படத்தில் நடித்தார். பெரிய பெரிய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தும் அதில் எல்லாம் நடிக்காமல் கௌதம் வாசுதேவன் கேட்கிறார் என்று அவரின் திரைப்படத்தில் மட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பதை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவே உள்ளது!!!!