
தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தையும் தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு நடிகராகவும் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமானியர்கள் பலரின் எடுத்துக்காட்டு நாயகனாகவும், சாமானியர் ஒருவர்ராலும் இவ்வளவு பெரிய இடத்தை பெற முடியும் திறமை இருந்தால் போதும் என்பதற்கு முதல் நடிகராக விளங்கியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் வருவதற்கு முன்பாக பெங்களூருவில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்து வந்த ரஜினிகாந்த் நடிப்பின் மீது ஆர்வத்தால் பிறகு அது குறித்து படித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இருப்பினும் இவருக்கு எடுத்தவுடனே நடிகர் கதாபாத்திரம் கிடைக்கவில்லை தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரமே கிடைத்தது.
அதனை நேர்த்தியாக நடித்து வில்லத்தனத்திலும் தனது புது ஸ்டைலை காட்டிய ரஜினிகாந்த்திற்கு பிறகு நடிகர் வேடம் கிடைத்தது அதிலும் மாஸ் காட்டி தனக்கென்று ஒரு தனி பாதையை வகுத்து பல பஞ்ச் டயலாக்குகள் பல சண்டை காட்சிகள் என தனது திரைப்பட பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி இன்று சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார். அதுமட்டுமின்றி இன்றைய சினிமா திரை உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ஃபேவரிட் ஹீரோவாகவும் நீங்க யாருடைய பேன் என்று கேட்டால் நாங்க எப்பவுமே சூப்பர் ஸ்டார் பேன் என்று கூறுகின்ற பல நடிகர்களை நம்மால் பார்க்க முடிகிறது.
ஏனென்றால் அந்த அளவிற்கான ஒரு பரந்த ரசிகர் கூட்டத்தை பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! மேலும் நடிப்பில் மட்டுமின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவி என்று கேட்பவர்கள் அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் அவர் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு செய்த பல உதவிகள் குறித்தும் சினிமா வட்டாரங்கள் பேசும் வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் இன்றளவும் சமூக வலைதளத்தில் வளம் வந்து கொண்டுதான் உள்ளது.எப்படி தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் என்கின்ற ஒரு நடிகரை மறுக்க முடியாதோ அதேபோன்று கமலஹாசன் என்கின்ற மற்றொரு நடிகரையும் மறுக்க முடியாது ஏனென்றால் அவரும் மறுபக்கம் பல வித்தியாச படங்களை எடுத்து தமிழ் சினிமாவிற்கு புத்துயிரை கொடுத்து வந்தவர்.
இதனாலே இருவருக்கு இடையான போட்டி தொடர்ந்து இருந்து வந்தது ஆனால் தற்பொழுது கமலஹாசன் செய்கின்ற பல செயல்கள் மற்றும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவரது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கடந்த பிக் பாஸ் சீசனில் பங்கு பெற்று தொகுப்பாளராக இருந்த கமலஹாசனின் பல செயல்கள் அவரது ரசிகர்களுக்கும் சரி பிக் பாஸ் ரசிகர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்காக எந்த கட்சியின் மீது தொடர் விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் கமலஹாசன் வைத்து வந்தாரோ அதே கட்சியில் கூட்டணி அமைத்து ஒரு சீட்டைப் பெற்றதும் கமலஹாசனின் ரசிகர்களுக்கு அதிருப்திக்கு மேல் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கமலஹாசன் ஒரு செயலை செய்து அதனால் தற்போது வாங்கியுள்ள கர்மா ஒன்று சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. அதாவது சமூக வலைத்தளத்தில் நெடிசன் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் பிக் பாஸ் வீட்டீல் ரஜினி புகைபடம் வைத்திருந்தது விஜய் டீவி. அதை எடுக்க சொன்னார் கமல். தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கவின் படத்தில் கமல் புகைபடம் இல்லை. இதுதான் கர்மா. அடுத்தவன் புகழ அழிக்க நினைச்சா நீதான் அழிஞ்சி போவ... என்று பதிவிட்டு கமலஹாசனை பங்கமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பல தரப்பில் இருந்து கவனங்களை பெற்று வருகிறது