
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள சூர்யா நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் கார்த்தியின் அண்ணன் என்பது அனைவருக்கும் தெரிந்தது மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகி தொடர்ச்சியாக விமர்சனங்களையும் தோல்விகளையும் சந்தித்து வந்த சூரியா பிதாமகன் திரைப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்றார். இதற்கு பிறகு தொடர்ச்சியாக பல படங்களை நடித்து அந்த படங்கள் அனைத்திலும் வெற்றியும் கண்டார் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது நடிகர் சூர்யா திரை உலகில் எப்படி ஒரு நல்ல நடிகராக அறியப்படுகிறாரோ அதே சமயத்தில் அரசியல் வட்டாரங்களை பார்க்கும் பொழுது திமுக சார்ந்த கருத்தை உடையவர் என்ற ஒரு பேச்சு அரசியல் விமர்சனங்கள் மத்தியில் இருந்தது.
ஏனென்றால் கடந்த ஆட்சி காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தொடர்ச்சியாக திமுகவிற்கு ஆதரவளிக்கும் வகையிலான பல கருத்துக்களை பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் பேசி வந்த நடிகர் சூர்யா தற்போது திமுகவின் ஆட்சியில் பல பிரச்சனைகளையும் அதிருப்திகளையும் மக்கள் சந்தித்த பொழுதும் அதற்கான குரலை அவர் முன் வைக்கவில்லை அதோடு சென்னையில் இருந்து மொத்தமாக அவர் மும்பைக்கு சென்று குடி பெயர்ந்திருப்பதும் விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அரசியல் பக்கம் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார் சினிமாவில் கங்குவார் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டும் இன்றி அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய லாப நோக்கமற்ற ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பொது சேவை என மூன்றிலும் உள்ள நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்றத்தின் மூலம் தற்போது அதிரடியான பல நடவடிக்கைகளை முன் வைத்து வருகிறார்.
அதாவது அகில இந்திய சூரிய நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர் எ ராஜ் தலைமையில் திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் அகில இந்திய சூரிய நற்பணி இயக்க நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அந்தக் கூட்டத்தில் வார்டு வாரியாக சூர்யாவின் அகில இந்திய நற்பணி இயக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து 60 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வார்டிலும் நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்கால திட்டமிடலை முன்வைத்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக சூர்யா நற்பணி இயக்கத் தலைமை. இதுவரை விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடந்துள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை ஒவ்வொரு வார்டிலும் பலப்படுத்தி பிறகு அதன் மூலம் பல உதவிகளை செய்து வந்து தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு கட்சியையும் தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் 2026 ஆம் தேர்தலில் நிச்சயமாக போட்டி போட உள்ளதாக அறிவித்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு முன்னணி நடிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சூர்யாவும் தனது நற்பணி மன்றத்தை 60 மாவட்டத்திலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ள செய்தி வெளியாகி இருப்பது இவரும் அரசியலில் நுழையப் போகிறாரா? ஒருவேளை அரசியலுக்கு வந்தால் எப்படி யாருடன் இனைவார் யாருக்கு எதிராக போட்டியிடுவார் என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது.