அண்ணாமலை தலைமையில் கோவையில் திமுக அரசின் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்து இருந்த சூழலில் கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக பெரிய அளவில் கூட்டம் கூடாது என காவல்துறை தரப்பிலும் ஆளும் கட்சி தரப்பிலும் எதிர்பார்த்து இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய அளவில் பாஜகவினர் கூட்டினார்கள்.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதாவது, வணக்கம் Thiru M. K. Stalin avargale, this is BJP Tamilnadu from Coimbatore
பாஜகவின் ஒரு மாவட்ட தலைவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதற்கு முன் தமிழகத்தில் இத்தனை பெரிய கூட்டம் கூடியது இல்லை. கோவை மாநகரம் கொந்தளித்தது.மாவட்டத் தலைவருக்கு இப்படி என்றால், மாநிலம் முழுவதும் ஆளும்கட்சியின் அதிகார அத்துமீறல் நடைபெறும் என்றால் தமிழகம் அதை தாங்க முடியாது.
ஆளும்கட்சியின் அராஜகத்தை கண்டித்து காவல்துறையின் கடமை மீறலை கண்டித்து ஆ ராசாவின் ஆபாச பேச்சை கண்டித்து பேச்சுரிமை மறுக்கப்படும் பேதமையை கண்டித்து கோவை மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜகவினரை துணை அமைப்பினரை கைது செய்ததை கண்டித்துஒட்டுமொத்த தமிழினமே ஒன்றாய் திரண்டு வந்தது போல உணர்ச்சிமயமான ஆர்ப்பாட்டம்.
இன்னும் தமிழக அரசு தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால், நடுநிலையாக அரசை நடத்தாவிட்டால், முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக மக்கள் நடத்தினாலும் வியப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மாவட்ட தலைவர் கைதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வெறும் ட்ரைலர்தான் மெயின் பிக்ஸர் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.