Cinema

சூர்யா 43 கதைக்களம் இதுவா!....அப்படி போடு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

actor surya, jeevi prakash
actor surya, jeevi prakash

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்ககு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார். சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார். அந்த படத்தின் டைட்டில் தற்போது படக்குழு அறிவித்துள்ளது.சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா மற்றும் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி படம் எதிர்ப்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது.


அதுமட்டும் இல்லாமல் இந்த படம்  நேஷனல் அவார்ட் பெற்றது.  மீண்டும் கூட்டணி சேர இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது. சூர்யா 43 படத்திற்கு அதிகாரப்பூர்வாமாக "புறநானூறு" என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா உடன் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். மேலும் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். வீடியோ உடன் சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், படம் கேங்ஸ்டர் கதை என்பது அந்த வீடியோவே உறுதி செய்கிறது.

1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இந்த படம் உருவாக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மலையாள நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இந்த சூர்யா 43 படத்தில்  நஸ்ரியா நடிப்பதும் ஆச்சரியமான விஷயம்தான். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமலிருந்தவர் சமீபமாகத்தான் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். செலக்ட்டிவ்வாக கதைகளைத் தேர்வு செய்து வரும் நஸ்ரியா, இந்தப் படம் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி எதிர்ப்பு குறித்த கதைக்களமா அல்லது அதனை மையப்படுத்தி எதாவது ஆக்க்ஷன் படம் என்று வரவிருக்கும் நாளில் தெரியவரும். சூரியாவுக்கு தராது கங்குவா, புறநானூறு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்து இருக்கிறார் நடிகர் சூர்யா.இந்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கும் நிலையில் இது அவருக்கு 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூரரை போற்று படம் கொரோனா காலத்தில் வெளியானதால் தியேட்டரில் வெளியிடாமல் படக்குழு அமேசான் பிரைமில் வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்த டைம் மிஸ் ஆகாது என்று ரசிகர்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் சமூக தளத்தில் #suriya43 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.