Cinema

இனி இவங்க சவகாசமே வேண்டாம் திருந்திய சமுத்திரக்கனி!

samuthrakani
samuthrakani

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சமுத்திரக்கனி தமிழ் திரையுலகின் இயக்குனராகவும் நடிகராகவும் பின்னணி குரல் நடிகராகவும் எழுத்தாளராகவும் உள்ளார். இவர் உன்னை சரணடைந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமாகினார். இந்த முதல் திரைப்படமே இவருக்கு சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை பெற்றுக் கொடுத்தது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் நாடோடி திரைப்படத்தின் மூலம் மற்றும் பல விருதுகளை வாங்கி குவித்தார். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் நிமிர்ந்து நில் மற்றும் அப்பா இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரும்பாலும் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது அதிலும் குறிப்பாக அரசாங்கத்தில் நிகழும் ஊழல்களை குறித்து நிமிர்ந்து நில் படத்தில் தெரிவித்த இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதது போன்று இயக்கி இருப்பார் அதேபோன்று அப்பா திரைப்படத்தின் மூலம் பள்ளி குழந்தைகளின் பொது தேர்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த சமுத்திரக்கனி தனது இடதுசாரி சித்தாந்தத்தை மட்டும் என்றுமே கைவிடவில்லை. 


இதற்கிடையில் தமிழ் மலையாளம் படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் துணை நடிகராகவும் முக்கிய வில்லனாகவும் நடித்து தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளார். இருப்பினும் இவர் பெரும்பாலும் பெரியார் கூறிய சித்தாந்தங்களையும் கடவுள் மறுப்பு சித்தாந்தங்களையும் தனது கருத்துக்களாக முன்வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட தற்பொழுது ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது குறித்து பிரமித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு வருகிறார் ராமர், 500 வருடங்களாக காத்திருந்த ஒரு காத்திருப்பிற்கு ஒரு பலன் கிடைத்த விட்டது என்று அயோத்தியில் ராமருக்கான கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது, குழந்தை ராமர் வேறு தெய்வீக சொரூபத்தில் காட்சியளிக்கிறார் என்றான் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் முன்னதாக நேற்றைய தினமே சமூக சமுத்திரக்கனி திடீரென ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

அதில் வெல்வோம் என தலைப்பிடப்பட்டு ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசிர்வாதத்துடன் என்ற ஒரு போஸ்டரில் ராமர், சீதை, அனுமன் மற்றும் லட்சுமணன் சிலைகளைக் கொண்ட புகைப்படத்திற்கு பின்னால் அயோத்தி ராமர் கோவிலும் இடம்பெற்றுள்ளது, மேலும் அந்த போஸ்டரில் சமுத்திரக்கனி தனது முதல் ப்ரொடக்ஷன் ப்ராஜெக்ட் தொடங்கியுள்ளதாகவும் அதற்கான முதல் பார்வையை நாளைய தினம் அதாவது இன்று சரியாக ராமர் அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை இடப்படும் நேரமான 12 20 மணி நேரத்தில் வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று சமுத்திரக்கனி தற்பொழுது தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் முதல் படத்தின் முதல் போஸ்டரை சரியாக 12:20 மணிக்கு வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ராமம் ராகவம் என்ற படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது, இது குறித்த சினிமா வட்டாரத்தில் விசாரித்த பொழுது நாடே ராமர் பக்கமும் இந்து சனாதன தர்மபக்கமும் செல்லும் பொழுது இனி நாம் மட்டும் இடதுசாரிகள் மற்றும் பெரியார் கருத்துக்களை பேசிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது! ஒதுக்கி விடுவார்கள் என முடிவெடுத்து சமுத்திரக்கனி இது போன்ற பதிவை இட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.