அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலையில் 'பிரான் பிரதிஷ்டா' நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்ட வண்ணம் உள்ளன. தமிழகத்தில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து துறவிகள், தொழிலதிபர்கள் மட்டும் திரைபிரபலங்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடக்கும் அயோத்தி விழாவிற்கு நேற்று மதியமே சென்னையில் இருந்து கிளம்பினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சினிமா துறையை சேர்ந்த அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், கங்கனா ரனாவத், ரன்பீர் கபூர், தனுஷ், ராம்சரண், சிரஞ்சீவி, மோகன்லால் என சினிமா நடிகர்கள் பலரும் ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் முகாமிட்டுள்ளனர். ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பரை சந்தித்தது தொடர்பான புகைப்பணம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழ் சினிமாவில் இருந்து தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிகள் பாலிவுட் படத்தில் நடித்து வருகின்றனர். இது தற்போது ரசிகர்களால் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. இவர்களுக்கெல்லாம் முன்னாடியே இந்தி சினிமாவில் நடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அனுபம் கெர் உடன் இணைந்து நடித்தவர் சூப்பர் ஸ்டார். பலமுறை வடமாநிலத்திற்கு செல்லும்போது தனது நண்பரை சந்திப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
பாலிவுட்டின் மூத்த நடிகரான அனுபம் கெர் அயோத்தியில் ரஜினிகாந்த் வந்து இறங்கிய தகவல் தெரிந்ததும் ரஜினிகாந்தை சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய நண்பரை சந்தித்ததில் ரொம்பவே சந்தோஷம். ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராம ஜென்ம பூமியான அயோத்திக்கு வந்துள்ளார் என பதிவிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு தனது நண்பரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டெல்லியில் தேசிய விழா ஒன்றில் பங்கேற்ற போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் தற்போது மீண்டும் சந்தித்துள்ளனர்.
தமிழில் அனுபம் கெர் ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த வயதிலும் பல மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான கோஸ்ட் படத்திலும் நடித்திருப்பார். அமிதாப் பச்சன் உடன் சந்திக்கலாம் என கூறப்படுகிறது. அயோத்தி விழாவில் ரஜினிகாந்துக்கு மட்டும் முன் வரிசையில் அமர இருக்கை ஒதுக்கப்பட்டது ஆனால் அவரது குடும்பத்துக்கு இடம் ரஜினிகாந்த் பக்கத்தில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழ் முன்னணி நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.