Cinema

சூர்யா மீது அமலாக்காத்துறை நடவடிக்கை பாய்க்கிறதா?. ஆதாரங்களுடன் வெளியான பரபரப்பு தகவல்!

suriya jaibheem
suriya jaibheem

நடிகர் சூர்யா இருளர் அறக்கட்டளைக்கு ஒரு கோடி கொடுத்தார் என்ற விவகாரம் கடும் சர்ச்சையை உண்டாக்கியது இல்லாத டிரஸ்டிற்கு எப்படி சூர்யா பணம் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஆதாரங்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்த தகவல்களை விரிவாக பதிவு செய்யும் செல்வ நாயகம் தற்போது சூர்யா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு :-


1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை  இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) என்.ஜி.ஓவுக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை கைப்பற்ற முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதமாக வைக்கப்பட்டது - ஒரு என்.ஜி.ஓ இன்னொரு என்.ஜி.ஓவுக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கல்விக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அகரம் ஃபௌண்டேஷன் எப்படி பழங்குடி இருளர் டிரஸ்ட்டுக்கு பணம் கொடுக்க இயலும்? என்.ஜி.ஓ சட்டப்படி அகரம் ஃபௌண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்கலாம். 

2, அந்த “இருளர் டிரஸ்ட் என்று ஒன்று பதிவேட்டிலேயே இல்லை” என்று தெரியவருவதால், இது பண மோசடி / ஃபோர்ஜரி என்ற குற்றங்களுக்கு ஆளாக வாய்ப்பு. அதன் காரணமாக, அமலாக்க பிரிவு & வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கலாம். (தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம். நாமும் புகாரளிக்கலாம் ).


3, பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் இன்னும் ஏழ்மையில் வாடும்போது, அந்தோணிசாமி குடும்பம் ஸ்வீடன் சென்று செட்டிலானது எப்படி என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. “குறவர் இனத்தை சார்ந்தவர்களை ஏன் இருளர்களாக காட்டினார் சூரியா?” என்ற கேள்விக்கும் பதிலில்லை.

4, பார்வதி அம்மாள் அனுமதி இல்லாமல் அவரை பற்றி படம் எடுத்த சூர்யா மீது வழக்கு தொடுக்கலாம் என மாரிதாஸ் உள்ளிட்டோர் விவரங்களை பகிர்ந்துள்ளனர். பூலன் தேவி கதையை படமாக எடுத்தவர்கள் பூலன் தேவி வழக்கு தொடுத்ததும் அவருக்கு பணம் கொடுத்தனர். கிரிக்கெட் தோனி, சச்சின் கதைகளும் அவ்வாறே. 

5, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்ட 9 கேள்விகளை அலட்சியம் செய்த சூர்யாவிற்கு ரூ 5 கோடி கேட்டு வன்னியர் சங்கம் பாலு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்தப்பணத்தை பார்வதி அம்மாளுக்கு கொடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். 

6, இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த வெளிநாட்டு நன்கொடை சட்ட (FCRA 2020) திருத்தங்களை எதிர்த்து பல என்.ஜி.ஓக்கள் நீதிமன்றம் நாடியிருக்கிறார்கள். அந்த வழக்கு விசாரணையின் போது, “வெளிநாட்டு நன்கொடை என்பது என்.ஜி.ஓக்களின் அடிப்படை உரிமை கிடையாது. சட்டத்துக்கு பணிந்தால் மட்டுமே நன்கொடை பெறலாம்” என்று மத்திய அரசு காரசாரமாக வாதம் செய்ய  உச்சநீதிமன்றமும், “எந்த நோக்கத்துக்காக நன்கொடை வாங்குகிறோம் போன்ற விவரங்கள் தராத என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது” என்று (படம் 3) என்.ஜி.ஓக்களை கடிந்திருக்கிறது.

7, “போர் என்பது சிவில் சொசைட்டி (என்.ஜி.ஓ)களை கொண்டே நடத்தப்படும். எனவே காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் டோவல் சில நாட்களுக்கு முன்  பேசியிருப்பது (படம் 4) என்.ஜி.ஓக்கள் எதிர்ப்பை பெற்றாலும், ‘மெசேஜ்’ தெளிவாக போய்ச்சேர்ந்து விட்டது, “என்.ஜி.ஓக்களை கண்காணியுங்கள் காவல்துறையினரே” என்று. “தானம் தர்மம் செய்வது நல்ல காரியம்” என்று மக்கள் ஆதரவு கொடுப்பதால், சட்டவிரோத செயலை எல்லாம் இப்போது என்.ஜி.ஓக்களை கொண்டு செய்கிறார்கள்.

8, செய் பீம் மூலம் விளம்பரம் தேடும் சந்துரு, ஒரு மார்க்ஸிஸ்ட் என்பதையும், ஸ்டூடெண்ட்ஸ் ஃபெடெரேஷன் SFI  உருவாக்கியவர்களில் ஒருவர் என்பதையும் - கடும் இடதுசாரி - என்பதையும் ஏன் செய் பீம் காட்டவில்லை? அந்த குறிப்பிட்ட வழக்கில் சந்துருவை விட முக்கியப் பங்கு அந்த நீதிபதிக்கு போயிருக்க வேண்டும். அந்த வழக்கை விடாமல் துரத்திய வன்னியர் (கம்யூனிஸ்ட்டுக்கு) போயிருக்க வேண்டும். மாறாக, வன்னியர்களை வில்லன்களாக சித்தரிக்க முயன்றிருக்கிறார் சூர்யா ஒரு தவறை செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டு, செய்ய வேண்டிய திருத்தங்களை செய்யாமல், ஆதரவாளர்களை கொண்டு கருத்து சுதந்திரம் என்று பேசுவது எல்லாம் தவறு  என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார் செல்வ நாயகம்.