
தமிழ் சினிமாவில் வலம் வரும் விஜய் தற்போது அரசியல் கட்சி தலைவராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி வரை சம்பளமாக வாங்கிவரும் விஜய் நடிப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். திரை உலகில் உச்சத்தில் இருக்கும்போது விஜய் இவ்வாறு முடிவெடுத்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைககரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்து நடனமாடினார். பின் அவர் நடிகராக வலம்வருவார் என நினைத்த நிலையில் அவரை சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை.
அப்பா நடிகர் என்பதால் சஞ்சயும் நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதுவும் லைக்கா நிறுவனம் அவரின் படத்தை தயாரிப்பதாக செய்திகள் வந்ததும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.லண்டனில் சினிமா இயக்கம் பற்றி படித்திருக்கும் சஞ்சய் நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களில் வேலை செய்திருக்கிறார். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜோசன் சஞ்சயை நடிக்க அழைத்தும் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டாரம். மேலும் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பதே நடிகர் விஜய் மகனின் விருப்பமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பில் சஞ்சய் படம் இயக்குகிறார் என்கிற செய்தி வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆனால் ஆனால், கிணத்தில் போட்ட கல்லாக சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் அப்படியே இருக்கிறது. கவினிடம் கதை சொல்லி இருக்கிறார், துல்கர் சல்மான் நடிக்கிறார் என பல செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இந்த தகவலை கவின் மறுத்தார்.ஆனால், கவின் மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களிடம் ஜேசன் கதை சொன்னது உண்மைதான் எனவும், அவர்கள் கேட்ட சில விளக்கங்களுக்கு ஜேசனிடம் பதில் இல்லை என்பதாலும், இயக்கத்தில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை என்பதாலும் அவரின் இயக்கத்தில் நடிக்க யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது
அதோடு, அந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்கும் ஜேசன் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி எஸ்கேப் ஆகிவிட்டாராம். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனை இசையமைக்க வேண்டும் என தீவிரமாக கால்ஷீட் கேட்டு வருகிறாராம் ஜோசன் சஞ்சய். அதேபோல், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் இதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு போட்டோ சூட் நடத்தப்பட்டது . இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார்.லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் உறுதியாகி உள்ளது.
ஆனால், பிரபலமான நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டாததால் படம் டேக் ஆப் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு, தன்னை நம்பாமல் படத்திற்கு ஆலோசனை கொடுக்க லைக்கா தயாரிப்பில் சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டிருப்பதும் ஜேசன் சஞ்சய்க்கு அப்செட்டை ஏற்படுத்தி இருக்கிறது.ஏற்கனவே ஒரு வருடம் போய்விட்ட நிலையில் இந்த வருடமாவது ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.