Cinema

காதல் சுகுமார் அவிழ்த்த ரகசியம்.... இதெல்லாம் நடந்துருக்கா...?

KADHAL SUGUMAR
KADHAL SUGUMAR

தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பல பேர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பை பெற்றெடுப்பார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தமிழ் சினிமாவில் இருந்து சில காலம் மறைந்து பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து மக்கள் அனைவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பார்கள் அந்த வகையில் தான் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் நடிகர் பரத்திற்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் சுகுமார் இவரை வெறும் சுகுமார் என்று கூறினால் கூட பலருக்கு தெரியாது காதல் சுகுமார் என்று கூறினால் சட்டென்று அனைவரது நினைவிற்கும் வந்து விடுவார். இவர் தற்போது சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி ஆகி உள்ளார். இந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் சமீபத்தில் தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் தன்னை குறித்தும் தான் சினிமா வட்டாரங்களில் சந்தித்த பல ஏமாற்றங்கள் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.


இது தற்போது சமூக வலைதளம் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் கவனம் பெற்று வருகிறது. அதாவது, இந்த படத்திற்காக இளன் முதன்முறையாக என்னை அணுகி பேசும் பொழுது சின்ன கதாபாத்திரம் தான் ஆனால் படத்திற்கு நல்ல வலு சேர்க்கும் என்று கூறியிருந்தார் அதே நேரத்தில் நான் என் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டுமே எப்பொழுதும் கேட்பேன் ஏனென்றால் சினிமாவில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பணம் என்பதும் எனக்கு மிக முக்கியமானது இல்லை! இளன் சொன்னபடியே இந்த படத்துல நான் நடிச்ச கதாபாத்திரம் நிறைய பேருக்கு ரொம்பவே புடிச்சி இருந்துச்சு எல்லாரும் இளன் மற்றும் கவின் சேர்ந்து உனக்காக ஒரு படம் பண்ணி இருக்காங்க அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க மேலும் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கும்போது உண்மையாவே நானே எமோஷனல் ஆகி தான் நினைச்சேன் ஏன்னா எனக்குமே இது ரொம்ப ரிலேட் ஆச்சு, 

கடந்த பத்து வருஷமாவை நான் சினிமால டைம்லைன்ல இல்லவே இல்ல அதனால டைரக்ஷன் படிச்சேன். டைரக்ஷன் கூட எனக்கு செட் ஆகல ஏன்னா சின்ன பட்ஜெட்னால சின்ன நடிகர்களை தான் என்னால தேர்ந்தெடுக்க முடிஞ்சுச்சு இது அதோடு காமெடி என்பது பலருக்கு கேள்விக்குறியாக இருந்துச்சு, இந்த படத்துல வர்ற மாதிரியே அப்போ கொஞ்சம் பிஸியா தான் இருந்தேன் ஆனா சிலர் நான் அடிச்சா நடிக்க மாட்டேன்னு சொல்லுவாங்க அதனால சில டைரக்டர் மற்றும் புரொடியூசர்ஸ் அந்த நடிகர் முக்கியம் அப்படின்னு என்ன திருப்பி அனுப்பிடுவாங்க அதுவும் செட்டுக்கு வந்த அப்புறம் கூட திருப்பி அனுப்பி இருக்காங்க அந்த மாதிரி நிலைமையில் எல்லாம் ரொம்பவே அவமானமா இருக்கும்! அதே நேரத்துல அப்படி நடக்கிறது தனிப்பட்ட முறையில் எனக்கு நடக்கிற அவமானம் கூட எனக்கு தோணுது கிடையாது என்னுடைய கலைய அந்த இடத்துல மதிக்க மாட்டாங்க, இப்படியே பல பெரிய நடிகர்களோட தொடர்ந்து பயணிக்காமல் போய்டுச்சு! அதுவும் சச்சின், ஆறு, இங்கிலீஷ் காரன் போன்ற படங்களில் எல்லாம் முதலில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது ஆனால் அந்த வாய்ப்பு என்கிட்ட இருந்து போயிடுச்சு இருந்தாலும் நான் அதுக்கு கவலைப்படல என்று உருக்கமாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனராக 2015 திருட்டு விசிடி என்ற திரைப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்த சுகுமார் அடுத்ததாக சந்தானத்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் மேலும் அதற்கு முன்பாகவே ஆறு படங்களில் நடித்துள்ளதாகவும் தொடர்ச்சியாக அந்த படங்கள் எல்லாம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.