
சினிமா என்றாலே நடிகை நடிகர் காமெடி எண் என பல கதாபாத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள் அந்த வகையில் ஒரு படத்திற்கு நடிகை எவ்வளவு முக்கியமோ அதேபோன்று வில்லன் கதாபாத்திரமும் மிக முக்கியம். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு வில்லனாக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் ஆந்திர திரைப்பட துறை மற்றும் தமிழ் திரைப்பட துறையிலும் அதிகமாக நடித்திருக்கிறார் ஆரம்பத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்து நடித்து வந்த கோட்டா சீனிவாச ராவ் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார் அதுவும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இருந்தாலும் கோட்டா சீனிவாச ராவை பலருக்கும் வில்லன் கதாபாத்திரமே ஏற்றது என்று கூறுவார்கள் ஏனென்றால், கோ மற்றும் சாமி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைத்திருப்பார் மேலும் திருப்பாச்சி திரைப்படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றெடுப்பார்.
அதே சமயத்தில் சகுனி திரைப்படத்தில் கார்த்திக்கு உறுதுணையாக நிற்கும் ஒரு அரசியல்வாதியாகவும் கலக்கியிருப்பார். இருப்பினும் சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பெருமளவில் பேசப்பட்டது. இப்படி தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் கலக்கிக் கொண்டு வந்த சீனிவாச ராவ் 1999 முதல் 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை இதற்கு என்ன காரணம் எங்கே சென்று விட்டார் என்று பார்க்கும் பொழுது சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் பொழுது தள்ளாடும் வயதில் அருகில் ஒரு உதவியாளரின் உதவியோடு நடக்க முடியாமல் வந்து தனது வாக்கினை செலுத்தி விட்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் எல்லாம் கோட்டா சீனிவாசனுக்கு டப்பிங் செய்த நடிகர் ராஜேந்திரன் இடம் பிரபல தனியார் பத்திரிகை நிறுவனம் பேட்டி ஒன்று எடுத்துள்ளது அதில் திடுக்கிடும் பல தகவல்களை கோட்டா சீனிவாச ராவ் குறித்து அவர் கூறியுள்ளார்.
அதாவது, சாமி படத்துக்காக நான் முதல் முதலில் அவருக்கு டப்பிங் செஞ்சேன் அப்பவே அவர் என்னுடைய வாய்ஸ் ரொம்பவே பொருந்துருச்சு அப்படின்னு சொல்லியிருந்தார் அதற்கு அப்புறம் தமிழ்ல நடிச்ச எல்லா படங்களுக்குமே நான் தான் அவருக்கு டப்பிங் செஞ்சேன் ஒரு 20 படங்கள் அவருக்கு பண்ணி இருப்பேன், அரசியல்ல எம்எல்ஏ'வா இருந்தா கூட அவர் எளிமையா தான் இருப்பார் பாக்குறதுக்கு தான் முரடன் மாதிரி ஆனா பழகுனா நல்ல மனுஷன், இருப்பினும் அவர் எந்த அளவுக்கு முடியாம போறதுக்கு அவரோட வயசு ஒரு காரணமா இருந்தாலும் அவர் கண் முன்னாடியே அவரோட மகன்.... ஒரே மகன் இறந்து போனதும் கோட்டா சீனிவாச ராவோட மனசு உடைய முக்கிய காரணமா இருந்துச்சு, ஒரே மகன் ஸ்போர்ட்ஸ் பைக் கேட்கிறான் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து வாங்கி கொடுத்தாங்க புது வண்டி எடுத்துட்டு எல்லாரும் ஒரு ஹோட்டலுக்கு போயிட்டு இருக்காங்க கோட்டா சீனிவாசராவ் மற்றும் அவங்க குடும்பத்தினர் எல்லாம் கார்ல வராங்க அவரோட பையன் மட்டும் அந்த பைக்ல முன்னாடி போயிட்டு இருக்கான் முன்னாடி போயிட்டு இருக்குற நேரத்துல ஒரு வேன் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படுது அதுல அவரோட பையன் ஸ்பாட்ல இறந்து போயிட்டாரு, இந்த விஷயத்தில் இருந்து இன்னமும் கோட்டா சீனிவாச ராவால் மீளவே முடியவில்லை! எப்ப பேசினாலும் தன்னுடைய மகனோட இழப்பு அவருக்கு இருக்கு அப்படிங்கிற பாதிப்பை அவரோட பேச்சு மூலமாவே நம்மளால தெரிஞ்சுக்க முடியும் அந்த அளவுக்கு உடைந்து போய் இருக்கிறார் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.