பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த திமுக நிர்வாகி சாதிய காரணங்களால் திமுகவில் இருந்து தலைமைக்கு தகவல் அனுப்பிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர், இந்த சூழலில் நாச்சியாள் சுகந்தி இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுக இன்று நேற்றல்ல அது ஒருபோதும் பட்டியல் சமூகத்துக்கான மரியாதையை தராது என உணர்ந்து சொல்லியிருக்கிறார் அந்தக் கட்சியில் 40 வருடங்கள் பணியாற்றிய திப்பம்பட்டி ஆறுச்சாமி, இந்த உண்மையை வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் பட்டியல் சமூக திமுகவினர் எத்தனை பேரோ யார் அறிவார் என கேள்வி எழுப்பியவர் மேலும்,
நீங்கலாம் பொதுத்தொகுதியில நிக்க கூடாதுப்பான்னு விசிகவிடம் சொன்னவர் கலைஞர். அதற்காக அண்ணன் ஆ.ராசாவை பெரம்பலூர் பொதுத்தொகுதியிலிருந்து நீலகிரி தனித்தொகுதிக்கு தள்ளிவிட்டு சமூகநீதியைக் காத்தவர் கலைஞர்.
திமுக, நீதிக்கட்சியாக இருந்த போது பட்டியலினத்துக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மறுத்த கட்சி அது அன்றும் இன்றும் எப்போதும் அப்படித்தான்.
திமுக ஒரு சாதி ஆதிக்கக் கட்சி அதை பட்டியலினம் உணராதவரை விடியலில்லை திமுகவுக்கு பாடுபட்டே ஆவேன் என நேர்ந்த விட்டவர்களை என்ன செய்ய முடியும்?முக்கிய குறிப்பு: திமுக ஆதரவு சேனல்கள், பத்திரிகைகள், 108 வகையான YouTube சேனல்கள் இத பத்தி பேசுங்க பார்ப்போம் உங்க சுயமரியாதைய, பகுத்தறிவ, சமூகநீதிய பேசுங்க என தனது கருத்தை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.