நடிகை கஸ்தூரி திமுக அரசை விமர்சனம் செய்து பதிவிட்ட ட்விட்டர் பதிவுதான் இப்போது ட்ரெண்டிங்கள் உள்ளது, தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து வருவதாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள சூழலில், மின் கட்டணம் உயர்த்த பட்டு இருப்பது சாமானிய மக்களை வெகுவாக பாதித்து இருக்கிறது. மின்கட்டண உயர்விற்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளே விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில், Haha. தண்ணி வரி, சொத்துவரி ஏத்துனதுக்கு gas petrol ஒன்றியம் னு இங்கே உருட்டுற உபிக்களின் விசுவாசத்தை பாராட்டத்தான் வேண்டும்.
BTW, gas petrol விலையை கண்டித்த முதல் ஆள் நான் தான். நான் கட்சி சார்பாளர் இல்லை. மனசாட்சியுள்ள ஒரு தமிழ்க்குடிமகள்.ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க பால் பொருள் விலை பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு .
மறுபடியும் electricity கட்டணம் ஏத்திட்டாங்க .இப்போ water sewage கட்டணமும் ஏறிடுச்சு .அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது! #expectMore
#TheVidiyalArasu என குறிப்பிட்டு இருந்தார், கஸ்தூரி பயன்படுத்திய #TheVidiyalArasu ஹாஷ்டாக்தான் விமர்சனத்தை பற்ற வைத்துள்ளது, பிரித்து படித்தால் நன்றாகவும், சேர்த்து படித்தால் கெட்ட வார்த்தையாகவும் தெரிவதாக நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
br>விடியல் அரசு பெயர் தற்போது கஸ்தூரி ட்விட் மூலம் புது பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.