நடிகர் கஸ்தூரி இயக்குனர் பேட்மன் மணிமேகலை மறு மனம் குறித்த பேட்டி மற்றும் பேட்டி எடுத்தவர்களை கடுமையாக சாடி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் யூடுப் சேனல்களின் வளர்ச்சி காரணமாக எது நடந்தாலும் அதனை பெரிது படுத்தி வியூஸ் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.
அந்த வகையில் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பேட்மேன் மற்றும் சின்னத்திரை நடிகை மணிமேகலை இருவரையும் மாறி மாறி யூடுப் சேனல்கள் பேட்டி எடுத்துள்ள நிலையில் தனியார் ஊடகம் ஒன்று இருவரையும் நேர்காணல் செய்தது, முக்தார் இருவரையும் மாறி மாறி பேட்டி கண்டார்.
இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இருவர் பேசிய பேச்சுக்கள் பலத்த சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி இது குறித்து காட்டமாக பதிவு செய்துள்ளார் அதில்,
பேட்டி எடுத்தவருக்கும் குடுத்தவருக்கும் எப்படியோ. தெரியவில்லை பார்க்க எனக்கு கூசிற்று. YouTube channels எல்லாம் வெட்கி ஜகா வாங்கவேண்டும் என்று சத்தியம் நியூஸ் இறங்கிட்டாங்களா ? என கடுமையாக சாடி இருக்கிறார் கஸ்தூரி அத்துடன் கஸ்தூரி பேட்டி எடுத்த மற்றும் கொடுத்த இருவரையும் விமர்சனம் செய்து இருந்தார் மேலும் யூடுப் சானல்களை காட்டிலும் ஊடகம் தரம் தாழ்கிறதே என விமர்சனமும் செய்து இருந்தார். பேட்டி எடுத்த முக்தாரையும் கடுமையாக சாடி இருந்தார்.
ஆனால் சில ஆன்லைன் ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புவதால் நான் சொன்னதை வெளியிடுங்கள் தவறாக செய்தியை வெளியிட்டதீர்கள் எனவும் சாடி இருக்கிறார் கஸ்தூரி. மொத்தத்தில் இனியாவது ஊடகங்கள் திருந்துமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.