Cinema

சூரிக்கு கைகொடுத்த திமுக... வடிவேல் கதை அவ்ளோதானா..?

Vadivel, Soori
Vadivel, Soori

சினிமாவை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் அரசியலில் தன்னை முழுமைப்படுத்தி வருகின்றனர். நடிகர்கள் பாஜக, அதிமுக திமுக என்ற கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஆரம்பத்தில் கேப்டன் விஜயகாந்த் உடன் கைகோர்த்து வந்த வடிவேல் ஒரு சின்ன பிரச்சனை காரணமாக திமுகவிற்கு சென்று தேமுதிக கட்சி குறித்தும் விஜயகாந்த் குறித்தும் வன்மையாக கண்டித்து வந்தார். நடிகர்களே கட்சியை தொடங்கும்போது நடிகர்கள் அரசியலில் சேருவது ஒன்றும் தப்பில்லை என கூறுகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி ஆளும் கட்சியுடன் கைகோர்த்துள்ளார்.


தமிழ் திரையுலகில் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவர் சூரி ஆரம்பத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சூரி சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது சினிமாவை தாண்டி அரசியலில் கால் பதித்துள்ளார் சூரி இது வடிவேலுக்கு டாப் கொடுப்பார் என பேசப்படுகிறது. மதுரையை சேர்ந்த வடிவேலு திமுக கட்சிக்கு சப்போர்ட் செய்ததால் மக்கள் திமுக பக்கம் கவனம் செலுத்தினர். அந்த வகையில், திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதும் வழக்கமாக வைத்து வருகிறர் வடிவேலு. அப்போது தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நடிகர்களின் ஐதீகம்.

திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும் வடிவேல், சூர்யா கார்த்திக் போன்றவர்கள் வரிசையில் சூரியும் இணைந்துள்ளார். இது தொடர்பாக பிரபல திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் சூரி குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். 'உதயநிதியுடன் நடிப்பு வாழ்க்கையை தொடங்குவது, திமுகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என வடிவேலுவின் ரூட்டில் இவர் பயணித்து வருகிறார். சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் உதயநிதியுடன் நடித்தார். அதன் பிறகு மதுரை வட்டார திமுக தலைவர்களுடன் பரிச்சயமானார். 

நடிகர் சூரி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உணவு கேன்டீன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனை அமைச்சர் PTR. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். கடந்த சில ஆண்டுகளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் வரிசை விஐபி இருக்கையில் உதயநிதிக்கு அருகே சூரிக்கு இடம் தரப்படுகிறது. தற்போது நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் சூரி கலந்து கொண்டார். சக மதுரைக்காரர் வடிவேலுவை ஓரம் தள்ளிவிட்டு முன்னேறிவிட்டார் சூரி. 

வரும் 2026 தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம், அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து மதுரை எம்.எல்.ஏ.சீட் என காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறார் என அரசியல் சார்ந்த நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் வடிவேலு திமுகவில் இணைந்த பிறகு பட வாய்ப்பு மட்டும் கிடைத்தது ஆனாலும் அது அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அரசியலில் இதுவரை வடிவேலுக்கு எந் பதவியும் கொடுக்கவில்லை குடும்ப அரசியல் மட்டுமே அங்கு நடந்து வருகிறது என கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வடிவேலுவை பயன்படுத்தியது போல் திமுக சூரியை பயன்படுத்திக்கொள்ளுமே தவிர பதவி வாய்ப்பு ஏதும் கிடைக்காது என கூறுகின்றனர்