நடிகர் கமல்ஹாசன் குறித்து திரை துறையை சேர்ந்தவரும் பாஜகவை சேர்ந்த நடிகர் ராதா ரவி தெரிவித்த கருத்துக்கள் கடும் கேள்வியை உண்டாக்கி இருக்கிறது. ராதாரவி முன்பு பேசிய வீடியோவை. தற்போது நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.
கமல் அமெரிக்கா சென்றபோது அவரது பெயரை பார்த்து அமெரிக்க காரன் ஏர்போர்ட்டில் உட்கார வைத்து விட்டான், கக்கூஸ் போக கூட தனியாக விடவில்லை, அங்கும் வந்து போலீஸ் நின்றான், கமல் கூச்சமாக இருக்கு என்று சொல்லியும் அவர்கள் விடவில்லை அப்போது நான் இந்து இந்து முஸ்லீம் இல்லை என்று கதறிதான் வெளியே வந்தார் கமல். அந்த கமலை பார்த்து கேட்கிறேன் உனக்கு அப்போது மட்டும் இந்து தேவை பட்டது, இப்போ என்ன என ராதாரவி முன்பு பேசிய வீடியோவை இணையத்தில் நெட்டிசன்கள் மீண்டும் உளவு விட்டுள்ளனர்.
ராதாரவியின் இந்த விடீயோவை பலரும் ஷேர் செய்து என்ன கமல் சார் உண்மையா? உங்களை கழிப்பறையில் உட்கார வைத்தார்களா? நீங்கள் இந்து என்று கூறிதான் வெளியே வந்தீர்களா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விடாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே கமலும் அமெரிக்க சர்ச்சைகளும் தொடர செய்து கொண்டே இருக்கின்றன, விஸ்வரூபம் திரைப்படத்தின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட பழக்கம் தான் கௌதமியை கமல் கழட்டிவிட்டு, பூஜாவுடன் ஜோடி சேர்ந்து கமல் சுற்ற காரணம் என்றெல்லாம் முன்பு தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
கமல் மீது ராதா ரவி வைத்த குற்றசாட்டிற்கு என்ன பதில் கமல் தரப்பில் இருந்து வெளிவருகிறது என திரை உலகை சேர்ந்தவர்களும் கேள்வி எழுப்பியதுடன் ஆவலுடன் காத்து இருக்கிறார்களாம். ராதாரவி பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.