தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தை இயக்கிய அமீருக்கும் அந்த படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவுக்கும் தற்போது பனிப்போர் தொடங்கி சினிமா துறையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு முழு காரணமும் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பருத்திவீரன் படம் நடிகர் கார்த்திக்கு முதல் படம் என்றும் அந்தச் படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார். இது நாள் வரை அந்த படத்திற்கு ரசிகர்கள் ஏராளம் என்றெ சொல்லலாம்.
இந்த படத்தை தயாரித்த இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் வார்த்தை போர் தற்போது நடந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படம் இயக்கும் போதே இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்தது. அப்போது தயாரிப்பாளர் சரியான பணம் கொடுக்காததால் படம் இயக்க சிரமம் ஏற்பட்டதாக படத்தில் நடித்த காதாபாத்திரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அமீர் பருத்திவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை தயார் செய்து விட்டு கார்த்தியிடம் கால் சீட்க்காக வெயிட் பண்ணுவதாக திரை வட்டாரங்கள் இடையே முணுமுணுக்கப்பட்டது. இதனிடையில் ஞானவேல் ராஜாவிடம் பருத்திவீரன் இரண்டாம் பாகத்திற்கு நீங்கள் தான் தயாரிப்பாளரா என்று கேட்டதற்கு முதல் பாகத்தில் அமீர் என்னை ஏமாற்றினார் நான் மீண்டும் ஏமாற மாட்டேன் என்று தெரிவித்தது அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே சண்டை ஆரம்பமானது. இதுநாள் வரை அது முடிவுக்கு வாராமல் தொடர்கிறது.
இதுவரை அமீருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வந்தாலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனியாளாக போராடி வருகிறார். நடிகர் சூர்யா, கார்த்திக் போன்றோர்கள் எங்கு அநீதி நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து ஆதரவு கரம் நீட்டும் இருவரும், விவசாயிக்கு எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக நடிகர் கார்த்தியும், மாணவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சூர்யா உதவி கரம் நீட்டுவார். ஆனால், இந்த திராவிட ஆட்சியில் இதுவரை எந்த ஒரு சமூக நீதிக்கும் குரல் கொடுக்காமல் இருக்கின்றனர். ஏன் அவருடையே குடும்பத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவருக்கு பிரச்சனை வந்தபோதும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் இந்த பருத்திவீரன் பட பிரச்சனைக்கு முழு காரணமும் சூர்யா குடும்பத்தை சேர்ந்த ஜோதிகா தான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது. அதாவது, சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. பருத்திவீரன் 2ம் பாகத்தை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட முயற்சிப்பதாக ஜோதிகா முடிவெடுத்துள்ளாராம். இதனால் தான் ஞானவேல் ராஜாவுக்கு ஒரு பிரச்சனை என்று வந்த போதும் தங்கள் தரப்பில் இருந்து எந்த வித கருத்தையும் கூறாமல் இருந்து வருகிறார்களாம்.
2டி நிறுவனம் இதுவரை சிறிய படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வந்த நிலையில் இப்போது பெரிய படத்திற்கு கவனம் செலுத்தி வருகிறார்களாம். அந்த வகையில் பருத்திவீரன் இரண்டாம் பாகம் தயாரிக்க முனைப்பு காட்டுவதால் அந்த நிறுவனத்தை பராமரிப்பது ஜோதிகா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். மேலும், பருத்திவீரன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதால் முதல் பாகத்தின் வைஃபை மீண்டும் கொண்டு வரவே அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு கருத்து தெரிவிக்காமல் அண்ணன், தம்பி என்று குடும்பமே பொறுமை காத்து வருவதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.