தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று பிரபல நடிகையாகவும், முன்னணி நடிகைகளின் வரிசையில் முக்கியமான ஒருவராகவும் இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்!! ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக முதல் முறையாக ஹீரோயினியாக அறிமுகமானார். நிலையில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் என் இணைந்து நடித்து பேமஸான ஹீரோயினியாகவும் பல விருதுகளை பெற்ற நடிகையாகவும் வலம் வந்து கொண்டுள்ளார். தமிழில் இது என்ன மாயம் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக கடந்த 2013 ஆம் ஆண்டில் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரெமோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.இந்த ரெமோ திரைப்படம் தான் கீர்த்தி சுரேஷ்க்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த நிலையில் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் நடிகர்கள் தொடர்ச்சியாக அரசியலுக்கு வந்து கொண்டுள்ளனர் என்று புதிய வகையில் சர்ச்சை கிளம்பியது. அதாவது கீர்த்தி சுரேஷ் நடித்த ஹீரோக்களான விஜய், விஷால் போன்ற நடிகர்கள் தற்பொழுது அரசியலில் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பதால் கீர்த்தி சுரேஷின் ராசியோ என்னவோ இவருடன் இணைந்து நடிப்பவர்கள் அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் பேச்சுக்கள் எழுந்து வந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது கீர்த்தி சுரேஷ் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் அனிருத் என்னுடைய நண்பர் மட்டும் தான் என்று தெளிவாக கூறியிருந்தார். மேலும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷின் தந்தையும் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் இது உண்மை இல்லை என்ற கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு கிசுகிசுவில் கீர்த்தி சுரேஷ் சிக்கியுள்ளார். அது என்னவென்றால்.. தொடர்ந்து பல பிரபலமான நடிகர்கள் மற்றும் சினிமா துறையை சார்ந்தவர்கலோடு தொடர்ச்சியாக பல கிசுகிசுக்களை மாட்டி வந்த கீர்த்தி சுரேஷ் கடைசியாக அனிருத் உடன் டேட்டிங் செய்வது குறித்த சர்ச்சையில் மாட்டி அது பொய்யான செய்தி என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹிந்தி மொழியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ் நடிப்பு வருவதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் தன்னைவிட இளம் வயதில் இருக்கும் அதாவது 20 வயதான நடிகரை காதலித்து வருவதாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் கீர்த்தி சுரேஷ் அதற்கு தற்பொழுது பதில் அளித்துள்ளார். இவர் அளித்த பதில் ஆனது தற்பொழுது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில் என்னவென்றால் விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வதந்தி பற்றி நாம் பேசும்போது அது உண்மையாகி விடுகிறது. எனவே அதைப் பற்றி பேசாமல் இருப்பதும், அதை தவிர்த்து விடுவதும் சரியான வழி என்று பதில் அளித்துள்ளார். இது குறித்த செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.