Cinema

லியோ படத்தில் அன்று திருமணம்...இன்று கத்திக்குத்து.....ரசிகர்களின் அவல நிலை!

actor vijay
actor vijay

தமிழகம் முழுவதும் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. அந்த வகையில் படத்தை தற்போது வரை ரசிகர்கள் தான் சென்று பார்த்து வருகின்றனர் குடும்பம் கொண்டாடும் வெற்றியாக இருந்தால் மட்டுமே படம் வெற்றி, தோல்வி என்று முடிவு எடுக்கப்படும். இருப்பினும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.இந்த திரைப்படத்தை மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு இந்தப் படத்தை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் வந்துள்ளார்.


இதேபடத்தை கான மேட்டுப்பாளையம்  சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்,  அதே  பகுதியை சேர்ந்த அஸ்வின், மாதவன், விஜய் ஆகியோர் கூட்டாக படம் பார்க்க வந்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரபாகரன் மற்றும் அவரது  நண்பர்கள் உற்சாகத்தில் தியேட்டரில் கத்தி கூச்சல் இட்டுள்ளனர்.  இதனால் பக்கத்தில் அமர்ந்திருந்த ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் எரிச்சல் அடைந்து விஜய், பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் பிரபாகரன் நண்பர்கள் மற்றும் அவரது நண்பர்களான விஜய் உள்ளிட்ட  நான்கு பேர் சேர்ந்து ராமேகவுன்டன்புதூரில் இருந்து வந்த விஜயிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதற்கிடையில் அப்போது அருகில் இருந்தவர்கள் இருவர்களையும்  சமாதானம் படுத்தியுள்ளனர். பொறுமை காத்து படம் பார்த்துவிட்டுஇ வெளியினுள் வரும்போது மீண்டும் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரபாகரன்,விஜய், அஸ்வின் மற்றும் மாதவன் ஆகியோர் விஜயை கையால் அடித்து துன்புறுத்தியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர் இதனால் விஜயக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விஜயை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கத்தியால் குத்திய பிரபாகரன், அஸ்வின்,மாதவன் என 3 பேர் கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய விஜய் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் இவ்ளோ பயங்கர விஜய் ரசிகரா என்று நகைச்சுவையாக கமெண்டை பதிவு செய்து வருகின்றனர்.முன்னதாக படம் வெளியான முதல் நாளே புதுக்கோட்டையில் திரையரங்கில் காதல் ஜோடிகள் திருமணம் எய்து கொண்டு ஐவரும் விஜய் ரசிகர் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ரசிகர்கள். ஆனால், இப்போது அதே படத்திற்கு கத்தி குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது விஜய் ரசிகர்களிடம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.