தமிழ் சினிமாவே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த கடைசியாக நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயிலர் படம் 550கோடிக்கு மேல் வசூலை படைத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அதன் பின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாக உள்ளது.இந்த லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் நடிக்க ஒபதந்தமாகியுள்ளார். ரஜினிகாந்தின் 170வது படம் என்பதால் இதுவரை அந்த படத்திற்கு பெயர் சூட்டப்படாததால் தலைவர் 170 என்று அளிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்திற்கு லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.தலைவர் 170 ஷூட்டிங் இந்த மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கியது அதன் பின், நாகர்கோயில், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ச்சியாக படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மும்பை சென்றார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கனவே இந்த படம் நல்ல சமூக கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் பொது எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அதில், “33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் 1991ம் ஆண்டு வெளியான ஹம் என்ற இந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அமிதாப் பச்சன் ஆரம்பத்தில் உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். இருப்பினும், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தலைவர் 170ல் இணைந்துள்ளார் அதனை ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.