Cinema

"காவி கலர்" சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நெல்சன்... பாஜக எதிர்ப்பாளர்களுக்கு சவுக்கடி..!

actor vijay beast movie
actor vijay beast movie

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தை சன் பிக்ஸர் நிறுவனம் தயாரித்துள்ளது, வழக்கமாக விஜய் திரைப்படங்களில் சில அரசியல் வசனங்கள் இடம்பெறும் அதுவே அந்த படத்திற்கு இலவச விளம்பரமாக அமையும், அதே நேரத்தில் பல நேரங்களில் விஜய் படத்திற்கு அரசியல் வசனங்களே வில்லனாக அமைந்து இருக்கின்றன.


2013-ம் ஆண்டு வெளியான விஜய்யின் தலைவா திரைப்படம் அரசியல் காரணங்கள் காரணமாக தமிழ்நாட்டில் முதலில் வெளியாகமல் தடைப்பட்டு போனது, இந்த சூழலில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான சூழலில் அதில் விஜய் காவி நிற பேனரை கிழித்து கொண்டு வெளியே வருவார்.

இதை பார்த்த திமுக, விசிக இன்னும் பிற அரசியல் அமைப்பை சேர்ந்தவர்கள் விஜய் பாஜகவிற்கு எதிராக காவி கலரை கிழித்து தனது குறியீடு அரசியலை செய்துள்ளார் என்றனர், திமுகவை சேர்ந்த சல்மா, விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் என பலரும் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

ஆனால் அவர்களின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் கருத்து தெரிவித்துள்ளார், தனியார் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் காவி குறியீடு குறித்து கேள்வி எழுப்ப பட்டது அதற்கு நெல்சன் அளித்த பதில் பின்வருமாறு :-

அய்யய்யோ…! காவிக் கலரையோ .. வேறு யாரையுமோ படத்தில் காயப்படுத்தவில்லை. அதில் எந்த குறியீடும் கிடையாது. அந்தக் காட்சி எடுக்கப்பட்ட நாளில் செட்டில் அடர்த்தியான ஆரஞ்ச் கலரில் பிளக்ஸ் பேனர் இருந்தது. காவி வண்ணம் இன்னும் மென் தன்மையுடன் இருக்கும் என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நெல்சன். இதன் மூலம் வேண்டும் என்றே விஜயை வைத்து பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்த சிலர் மூக்கு உடைப்பட்டு நிற்கின்றனர்.