Cinema

மூக்குத்தி அம்மன் பார்ட் 2!!! நயன்தாராவை தூக்கியெறிந்த ஆர்.ஜே.பாலாஜி...

Nayanthara
Nayanthara

அம்மன் திரைப்படங்கள் என்றாலே அதிக அளவில் மக்கள் விரும்பி பார்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. பொதுவாக திரைப்படங்கள் காதல், சண்டை மற்றும் சமூகப் பிரச்சனைகள் போன்ற கதைகளை மட்டுமே உள்ளடக்கி அதிக அளவில் எடுக்கப்பட்டு வரும். பெருமளவில் இது போன்ற திரைப்படங்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டே இருக்கும். ஆனால் ஆன்மீகம் சார்ந்த கதைகளான அம்மன் திரைப்படங்கள் மற்றும் பிற தெய்வங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதாவது தான் எடுத்து அவற்றை வெளியிடுவார்கள்.  


90ஸ் களில் எடுக்கப்பட்ட அம்மன் திரைப்படங்களான பொட்டு அம்மன் போன்ற பல திரைப்படங்கள் இன்றளவும் பல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது மட்டுமல்லாமல் முதல் தடவை பார்ப்பது போலவே அனைவரும் மிகவும் ரசித்து திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜியின்  மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் நடித்திருந்தார். திரைப்படமானது பொதுவாக இதுவரை வெளியான அம்மன் திரைப்படங்களைப் போல இல்லாமல் புதுவிதமான கதையை உள்ளடக்கி  தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றது போல அம்மனின் கேரக்டரும் அமைந்திருந்தது. இதனால் இந்த திரைப்படம் மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸும் நிறைந்து சூப்பர் ஹிட் திரைப்படமாக வலம் வந்தது. 

மேலும் ஆர்.ஜே பாலாஜி இதுவரை ஆர் ஜே வாகவும், கிரிக்கெட்டில் கமெண்ட்கள் கூறுவது மற்றும் திரைப்படங்களில் காமெடியனாக நடிப்பது என்று பல பணிகளை செய்து வருவார். இதன் மூலம் இவருக்கு அதிக அளவில் ரசிகர் கூட்டமே இருந்து வந்த நிலையில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி அதன் பின் தனது இயக்கத்தில் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படமும் எப்போதும் போல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்கப் போவதாக கூறி வருகின்றனர். அந்த நடிகை யார் என்று உங்களுக்கு தெரியுமா??? 

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அப்படியே அம்மனைப் போலவே சூப்பராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்று வந்தார். ஆனால் தற்போது நயன்தாரா பல திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருப்பதினால் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் நயன்தாராவிற்கு பதிலாக அம்மன் கேரக்டரில் திரிஷா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் முதல் பாகத்தில் நயன்தாரா சூப்பராக நடித்ததால் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது நயன்தாரா நடிக்கவில்லை என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி ஒரு மாற்றத்திற்காக நயன்தாராவை விட திரிஷாவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. மேலும் ஏற்கனவே விடா முயற்சி, தக் லைப் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் திரிஷா தற்பொழுது இந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அடுத்தடுத்த திரிஷாவின் திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.