Cinema

டி டி எப் வாசனை காட்டி... இந்த யூடியூப் பிரபலமும் சிக்க போகிறாரா?? சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ!!

TTF
TTF

இப்போதெல்லாம் இவர்கள் சினிமா பிரபலங்களா அல்லது யூடியூப் பிரபலங்களா என்பது கூட தெரியாத அளவிற்கு சில யூடியுப்பர்களுக்கு அளவுக்கு அதிகமாக ஃபேன்ஸ் இருக்கிறார்கள், அவர்களுகென்று தனி பேன் பேஜயும் உருவாக்கி அதன் மூலமும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து வருகின்றனர். அப்படி தமிழகத்தில் யூடியூப் வீடியோக்கள் மூலமும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலமும் மிகவும் பிரபலமாகி இருப்பவர் டிடிஎஃப் வாசன்! ஆரம்பத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியும் பல பகுதிகளுக்கு பைக் ரெய்டையும் மேற்கொண்டு தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு சில இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வைத்திருந்தார். அதற்குப் பிறகு வாசனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது பேன்கள் அனைவரும் கடலென திரண்டு டிடிஎஃப் வாசனுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து தமிழக பத்திரிகை மற்றும் டி டி எஃப் வாசன் குறித்து தெரியாத பலருக்கும் யாரடா இவர் என்ற தேடலை தேட வைத்தது.


இதற்குப் பிறகு அவர் பதிவிடும் பல வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு காவல்துறையினருக்கே மிகவும் சவாலாக அமைந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்ய முற்பட்டு தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் படுகாயம் அடைந்ததோடு வழக்குகளிலும் சிக்கினார். அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்கள் சிறையிலும் இருந்து பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது டூவீலர் லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வந்த டிடிஎஃப் சமீபத்தில் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் அடங்கிய ஒரு தொழிலை தொடங்கினார். இருப்பினும் அதிலும் சில குளறுபடிகளில் சிக்கி பெருமளவில் பேசு பொருளுக்கு உள்ளானார்.

இதனை அடுத்து டிடிஎஃப் வாசனும் அவரது காதலியும் இருக்கும் சில வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலுமானது, இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளார் டிடிஎஃப் வாசன். அதாவது, சமீபத்தில் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபட்டதால் அவர் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனால் இனி இதுபோன்று செய்ய மாட்டேன் என்று நீதிபதியிடம் முறையிட்டு தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டி எப்படி இன்னொரு வழக்கில் தனக்கு சாதகமான ஒரு தீர்ப்பை ஒரு வழக்கறிஞர் அல்லது மனுதாரர் பெருகிறாரோ அதேபோன்று டி டி எஃப் வாசனின் ரசிகர்கள் சிலர் டி டி எஃப் வாசனுக்கு மட்டும் வழக்கு அவருக்கு வழக்கு இல்லையா என்று மற்றுமொரு யூடியூப் பிரபலத்தின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதாவது தற்போது தமிழகத்தில் மிக முக்கிய யூடியூப்பர்களில் ஒருவராக வளர்ந்து வருகின்ற விஜே சித்துவிற்கு இரண்டு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும் தனது வீடியோக்கள் மூலம் பலரையும் மகிழ்வித்து வருகின்ற விஜே சித்து ஒரு முறை போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியுள்ள வீடியோவை தேடி கண்டுபிடித்து சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி டி டி எப் வாசனுக்கு ஒரு நியாயம் சித்துவுக்கு ஒரு நியாயமா? டி டி எஃப்'ஐ போன்று ஏன் சித்துவையும் கைது செய்யவில்லை என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனால் என்னடா புது சோதனை!! என சித்துவின் ரசிகர்களும் நண்பர்களும் பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துள்ளனர்!