Cinema

சபாஷ் சரியான போட்டி "திருமாவை" பங்கம் செய்த பரியேறும் பெருமாள் புகழ் நடிகர்!

Perumal, Thirumavalan
Perumal, Thirumavalan

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மக்கள் கவனத்தை பெற்றவர் நடிகர் கராத்தே வெங்கடேசன், வழக்கறிஞரான இவர் தீவிர இந்து மத பற்று கொண்டவர், சமூகத்தில் உண்டாகும் பல அரசியல் காரணங்களை ஒளிவு மறைவு இன்றி தனது கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருபவர்.


அந்த வகையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலகவேண்டும் என பேனர் புகைப்படம் ஒன்று வைரலானது இந்த புகைப்படத்தை எப்போதும் பேனரை பிடித்து கொண்டு இருக்கும் நந்தினியுடன் ஒப்பிட்டு, சபாஷ் சரியான போட்டி என கிண்டல் செய்துள்ளார் வெங்கடேசன்.


இது தவிர்த்து அமைச்சர் KKSSR ராமசந்திரன் தன்னிடம் மனு அளிக்கவந்த குறவர் சமுதாய சங்க தலைவரை, நிற்க வைத்து கால் மேல் கால் போட்டு அவமானப்படுத்திய சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி வரும் வேலையில், அது குறித்தும் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.



பிராமணனுக்கு சமமான ஆசனம் பத்தி பேசுறதுன்னு மனுஸ்ம்ருதியோட இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுறவய்ங்க ...ஏன் 2-வது படத்துல நிக்கிறவைங்க யாரும் ரெட்டியாருக்கு சமமா அங்க ஒரு பிளாஸ்டிக் சேரையாவது போடச் சொல்லி உட்கார வைக்கல ... ?

பின் இடுப்புல சூடு வச்சுட்டா என்னா பண்ணுறதுன்னு "ஆசன" வாய பொத்திக்கிட்டு இருக்காய்ங்களோ... ? எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.மேலும் செய்தி அமைச்சரை சந்தித்த குறவர் சமுதாய இளைஞர் கூறும் வேதனையை பாருங்கள் --- வீடியோ கீழே