Cinema

பெண்ணியம் என்ற பெயரில் போட்டோ என் உடல் என் உரிமை பெரியாரிஸ்ட்க்கு கிடைத்த பளார்!

Kanimozhi
Kanimozhi

சமூகத்தில் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும் போது புதிய பிரச்சனைகளை உருவாக்குவதே, சில பெண்ணியம் பேசும் நபர்களுக்கு வேலையாக போய்விட்டது, இந்த சூழலில் தீவிர விசிக ஆதரவாளரும், பெண்ணியவாதி என்று தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளும் கனிமொழி கதிரவன் என்ற ஒரு பெண்மணி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறார்.


ஆண்களை போல நானும் மேலாடை இன்றி இருப்பேன் என கூறி அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை உண்டாக்கியது, பல பெண்ணியவாதிகளே இதனை கண்டித்து வரும் வேலையில் ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இதுதான் வழிமுறையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு கனிமொழி கதிரவன் பதில் கொடுத்துள்ளார் அதில் அம்மணமா தான் புரட்சி பண்ணனுமா? 

இங்கன நா புரட்சியும் பண்ணல. ஒன்னும் பண்ணல ஆம்பளைங்க மட்டும் எப்டி டா சட்ட இல்லாம குளிக்கிறானுக னு கேள்வி மண்டைக்குள்ள வந்துச்சு குளிச்சேன்.

குளி அத ஏன் போஸ்ட் போட்ற? என்னோட ஐடி. என்னோட போட்டோ.அத்தன ஆம்பளைங்க மேலாடை இல்லாம போட்டோ போட்டு நா பாத்துருக்கேன். அங்க இந்த கேள்விலாம் கேட்டீங்ளா என்ன ? 

இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா? எந்த நேரத்துல ? நேத்து அருவிக்கு போனேன். குளிச்சேன். போட்டோ போட்டேன். ஆம்பளைங்க மாதிரி ட்ரெஸ் இல்லாம இருப்பீங்ளா? அப்ப நடுரோட்ல பப்ளிக்கா நடப்பீங்ளா? 

ஆண்களான உங்கனால கூட தான் ட்ரெஸ் இல்லாம இருக்க முடியும். எங்க நிர்வாணமா பப்ளிக்கா நடங்க. மேலாடை இல்லாம இன்டர்வியூ போங்க. முடியாது ல? அப்டி தான் எனக்கும். எங்கங்க என்ன பண்ணனும் னு பகுத்தறிய தெரியும். 

லைக்ஸ் க்காக இப்டியா? லைக்ஸ் போட வேணாம் னு ஆம்பளைங்கள நிறுத்து. See.  கடைசி வர இத காஜியா, காமமா, கிளர்ச்சியாவே பாக்குறானுகளே ஒழிய இதே ஆம்பள சட்ட இல்லாம தான குளிக்கிறான் அவன மட்டும் ஒன்னுமே சொல்ல மாட்றோம் னு எதாவது கேள்வி வருதா பாரு. நீ நம்புனாலும் நம்பலைனாலும் இது பாலின சமத்துவம் தான் என குறிப்பிட்டு இருந்தார்.

கனிமொழியின் இந்த படு மட்டமான தெளிவுரைக்கு அவரது பதிவிற்கு கீழே ஜெயஸ்ரீ கண்ணன் என்ற பெண்மணி பதிலடி கொடுத்துள்ளார், அதாவது ஆண்களை பார்த்து அவர்களை காப்பி செய்வதற்கு பதில் ஆணாக மாறிவிடு என குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ஆம்பள சட்ட இல்லாம நிக்குறான் அவன யாரும் ஒண்ணுமே சொல்லலியா லூஸு அவனுக்கு மேல ஒண்ணுமில்ல... ஆணைப் பார்த்து அவன மாதிரி ஆகணும்னு பொறாமைப்பட என்ன இருக்கு. அப்படி ரொம்ப பொறாமையா இருந்தா ஆணாக மாறிக்க. 

ஆம்பளைங்கள போட்டியா நினைக்குற எவளும் பாலின சமத்துவம்ன்ற வார்த்தையே பேசக்கூடாது..உன்ன மாதிரி பொம்பளைங்கதான் உடையில், நடையில், முடி வெட்டிக்குறதில்,  குடி, சிகரெட், கஞ்சா அடிப்பதில் இப்படி கழட்டிக் காட்டுவதில்  ஆண்களைக் காப்பி அடித்து இயல்பான பெண்மையை தாழ்வாக எண்ண வைக்குறீங்க.  பெண்ணுரிமை பத்தி எல்லாம் பேச அடிப்படை தகுதியே உனக்கு இல்ல.  இது கவன ஈர்ப்பு நோய் என பளார் பளார் என முகநூலில் சுட சுட பதிலடி கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.

என் உடல் என் உரிமை என இப்போது பெரியாரிஸ்ட்கள் தரப்பில் ஒரு குரூப் கிளம்பி இருப்பது இதுதான் உங்கள் பகுத்தறிவா என பலரும் போட்டு தாக்கி வருகின்றனர்.

கனிமொழி கதிரவன் source link -https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0cs9NQzEbSjSPFR5jyoAMAuucNFUVVi4dsyS3Uwh9Q2eEoZYRAJp9LsJcyHw87KKZl&id=100063065255987