Cinema

கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்த பளார்.. பதிலடி இனி வாய் திறப்பாரா?

Vairamuthu
Vairamuthu

பிரதமர் மோடி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு தொடங்குவதை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுகோள் விடுத்து இருந்தார், இதனை ஏற்ற பல பொதுமக்கள் நாளை(13/0822) முதல் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற தயாராகி வருகின்றனர்.


இந்த சூழலில் திரைப்பட கவிஞர் வைரமுத்து கல்வி பொருளாதாரத்தில் முன்னேறினால் மக்கள் தானாக தங்கள் வீடுகளில் கொடி ஏற்றுவார்கள் என ஏட்டிக்கு போட்டியாக தெரிவித்து இருந்தார், இதற்கு வைரமுத்துவிற்கு புரியும் வகையில் அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் பதிலடி கொடுத்துள்ளார். பதிலடி என்று கூறுவதை காட்டிலும் பளார் பளார் கொடுத்துள்ளார் என்றே கூறவேண்டும் அது பின்வருமாறு :-

அடிப்படை அறிவுக்கும் வைரமுத்துவுக்கும் துளி கூட சம்பந்தமில்லை என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது..அதனாலென்ன அது என் 'ராஜமுத்திரை' என அவரும் முயன்று கொண்டேதான் இருக்கிறார்..

வெள்ளையனை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கு மக்களை அழைத்த போது அதில் எத்தனை பேர் கல்வி,பொருளாதாரத்தில் முன்னேறி  இருந்தார்கள்..?

தன்னெழுச்சியாக மக்கள் ஜாதி,மத,மொழி,பொருளாதார ஏற்றத் தாழ்வு என எந்த வேறுபாடும் இல்லாமல்,தேசியக் கொடியை தோள்மேல் சுமந்து,'வந்தே மாதரம்' என முழக்கமிட்டு,தன் உயிரை,உடமையை,நல்வாழ்வை பலியாகக் கொடுத்து பெற்ற  சுதந்திரத்தின் 75 வது ஆண்டு இது..

இதனை கொண்டாடும் விதமாக சில விதிகளை தளர்த்தி அனைத்து மக்களும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுக்கிறார்.மக்களும் ஆவலோடு அதை முன்னெடுப்பதை கண் முன்னால் பார்க்கிறேன்..

ஆனால்,மோடி ஏதோ தன் கட்சியின் கொடியை ஏற்றச் சொன்னது போல இவர்கள் நொட்டாங்கு பேசிக் கொண்டு திரிவதை பார்த்தால் எரிச்சலாக உள்ளது..கொஞ்சமாவது அறிவொழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்..

பிச்சை எடுத்து வாழும் இந்தியன் கூட விருப்பமுடன் கொடியேற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான்..ஆனால் தின்னது செரிக்காத கூட்டத்துக்கு இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.காரணம்,இந்த ஒற்றுமை அவர்களின் நூற்றாண்டு கனவுகளை,பிரச்சாரங்களை உடைத்து சுக்குநூறாக்குகிறது என்பதே முக்கிய காரணம் என சுந்தர் ராஜா சோழன் தெளிவான பதிலடி கொடுத்துள்ளார்.