தமிழில் பாஜக சார்பில் வெளியிட பட்டுள்ள தேசத்தின் காவலர் அழைக்கிறார் பாடல் கடும் வைரலாக பரவி வருகிறது..செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக வெளியிடபட்ட AR.ரஹ்மான் இசையமைத்த பாடல் தமிழக அரசால் மிக பிரமாண்ட முறையில் எடுக்கப்பட்டு இருந்தது, குறிப்பாக welcome chennai பாடல் மிக பெரிய அளவில் ப்ரோமோட் செய்யப்பட்டது.
இந்த சூழலில் அந்த பாடலுக்கு இணையாக பெரிய கலைஞர்கள் இசை அமைப்பாளர்கள் இல்லாமல் தமிழக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது, தேசத்தின் காவலர் அழைக்கிறார் தேசிய கொடியை ஏற்றுவோம் வாருங்கள் என தொடங்கும் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் பல்வேறு பிரச்சாரங்களை பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள பாஜக தற்போது பாடல்கள் மூலம் தேசபற்றை இளம்தலைமுறைக்கு கொண்டு சேர்த்து இருப்பது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
பல கோடி செலவு செய்து முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான AR. ரஹ்மானை வைத்து திமுக அரசு போட்ட பீட்டிற்கு இளம் கலைஞர்களை கொண்டு பாஜக ரிபீட்டு கொடுத்து இருப்பதாக பாஜகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.