விருமன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரியை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்றுதான் பாடல் எழுத வேண்டுமா????
கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது.அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும்.கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான்.
ஏற்கனவே "கஞ்சா வெச்ச கண்" எனப் பாடல் வெளியாகி உள்ளது.அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது.இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன்,அபின்,...இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும்.
எதை ஒழிக்க வேண்டுமோ அதன் பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.திரைப்படத் துறையினர் மக்கள் நலன் குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும்.
நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என ராஜேஸ்வரி பிரியா குறிப்பிட்டுள்ளார்.