தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கும் இந்தியா அதே தொழில்நுட்பத்தால் பல பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டிலில் வழக்கத்தில் இருந்து வரும் டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2023 ஆம் ஆண்டில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது ஆபாச காணொளிகளில் உள்ளவர்களின் முகங்களுக்கு பதிலாக பிரபலங்களின் முகங்களில் போலியாக சித்தரித்து அதனை வெளியிட்டு பரபரப்பான சம்பவங்கள் கடந்த 2023 நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம் வேறு ஒருவரின் உடலோடு ஒப்பிடப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டது அதற்கு ராஷ்மிகா மந்தனா தனது வருத்தத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு நடிகர் அமிதாபச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி குறித்த வீடியோவும் வைரலானது, அதோடு நடிகை சிம்ரன், கஜோல் மற்றும் கத்ரீனா கைஃப் போன்றோரின் புகைப்படங்களும் டீப் பேக்கில் சிக்கியது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையான செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் முதல் நடவடிக்கையாக டீப் பேக் தொடர்பான புகார்கள் பதியப்படும் எனில் அதற்கு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு என்றும் சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கும் வீடியோக்களை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டது. ஆலோசனைக்கு பிறகு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இணையத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்பட்டு வரும் டீப் பேக் போன்ற செயலில் தற்போது இணையத்தை பயன்படுத்தி வரும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது எனவே அது போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் போலி தகவல்களை பகிரும் வலைதளங்களையும் கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் இதுபோன்ற தவறான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவோர் குறித்த விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அப்படி நியமிக்கப்படுபவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற விவகாரத்தில் சிக்கி இருக்கும் சமூக வலைதளங்களுக்கு ஏழு நாள் கெடு விதித்தும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் பதிவு செய்வதற்கும் இணையதளம் உருவாக்கப்படும், அவர்கள் எளிதில் எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்கு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மத்திய அரசும் தீவிரமாக இறங்கியதால் இனி டீப் பேக்கில் யாரும் சிக்க கூடாது என்றும் இதுவரை டீப் பேக்கை தவறாக பயன்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாராலும் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற திணக்கத்தில் திரிந்த அவரை தற்போது மத்திய அரசு கைது செய்துள்ளது! அந்த அளவிற்கு தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையை பாஜக அரசு வலுவாகவும் இணைய பயனாளர்களை பாதுகாக்கும் வேண்டும் என்பதை குறிக்கோளங்கள் கொண்டு செயலாற்றி டீப் பேக்கை தவறாக பயன்படுத்தி ராஷ்மிகா சம்மந்தனாவின் வீடியோவை வெளியிட்டவரை கைது செய்துள்ளது. இனிமேல் ராஸ்மிகா வீடியோ போல் எந்த பெண்ணாவது இதுபோன்ற வீடியோவால் தவறாக சித்தரிக்கப்பட்டால் அதனை புகார் வந்தவுடன் உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ராஷ்மிகா வீடியோ ஒரு முதற்படியாக அமைந்துள்ளது, இனி எந்த அரக்கனாக இருந்தாலும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.