Cinema

இதற்கு ஜாமீன் கிடைக்காமலே இருந்து இருக்கலாம் வச்சாங்கே ஆப்பு புலம்பும் ஷாருக்(ஹான்) தரப்பு !

sharukkhan
sharukkhan

போதை பொருள் கடத்தல் பயன்பாடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகனிற்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் அதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடும் நெருக்கடியை ஷாருக்கான் தரப்பிற்கு கொடுத்துள்ளது, மேலும் அதில் விதிக்கப்பட்ட முக்கிய மூன்று நிபந்தனைகள் இதற்கு ஜாமீன் கிடைக்காமலே இருந்து இருக்கலாம் என வேதனையில் உள்ளனர்.


இதுகுறித்து என்ன நடந்தது  என பார்க்கலாம் :அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் காந்தி ஜெயந்தி அன்று ஹிந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் அக்டோபர் 3 அன்று ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பிறகு அவர்களை அக்டோபர் 4ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.அக்டோபர் 4: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 7ம் தேதிவரை என்.சி.பி காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 நபர்களையும் என்.சி.பி காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அக்டோபர் 5:  மேலும் 4 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 11ம் தேதி வரை என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

அக்டோபர் 6: சொகுசு கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் அக்டோபர் 14ம் தேதி வரை என்சிபி காவல் விசாரணைக்கு அனுப்பப்பட்டனர்.அக்டோபர் 7: ஆர்யன் கான், மெர்சச்ன்ட், தமேச்சா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக் காவலை நீட்டிக்க வேண்டும் என என்சிபி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது இதையடுத்து ஆர்யன் கான் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட், ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து பதிலளிக்க என்சிபிக்கு கால அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.ஆர்யன் கான், மெர்ச்சன்டுடன் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அக்டோபர் 8: மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு எடுத்தது மாஜிஸ்திரேட் நீதிமன்றம். சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அக்டோபர் 11: சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணை. என்சிபி பதில் மனு தாக்கல்  செய்ய கூடுதல் அவகாசம் கேட்டது. விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 13: ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது சிறப்பு நீதிபதி வி.வி. பாட்டீல் விசாரணையை தொடங்கினார்.அக்டோபர் 20: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. ஆர்யன் கான், தமேச்சா இருவரும் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல்.அக்டோபர் 21: ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி சாம்ப்ரேவிடம் முறையிடப்பட்டது. விசாரணை அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அக்டோபர் 26: மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது. மெர்ச்சன்ட் தரப்பிலும் ஜாமீன் மனு தாக்கல்.அக்டோபர் 27: ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோரின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை நிறைவு செய்தனர். அக்டோபர் 28: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஆர்யன் கான், மெர்ச்சன்ட், தமேச்சா ஆகியோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இது வரை அனைத்தும் நலமாக இருந்தாலும் மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஷாருக் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அவை என்ன என்று பார்க்கலாம்.

குறிப்பாக, ஆர்யன் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால், அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். நீதிமன்ற விசாரணை குறித்து ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் வெளியிடக்கூடாது. சக குற்றவாளிகளுடனும், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களிடமும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், சாட்சியைக் கலைக்கவோ அல்லது சாட்சியிடம் பேசி தனக்குச் சாதகமாக மாற்றுவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது என்றும், நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறதுஅதே போல், பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும்,

 வெள்ளிக்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அழைக்கும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மொத்தம் 14 நிபந்தனைகளை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆர்யன் உட்பட 3 பேரும் தலா ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனிலும், அந்த தொகைக்கு தனி நபர் அல்லது இருவரின் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கும்படி தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 நடிகை ஜூஹி சாவ்லா ஆர்யன் ஜாமீனில் வெளிவர ரூபாய் ஒரு லட்சத்துக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் இந்த சூழலில்ஆர்யான் கான் வெளியே வந்தாலும் அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல்தான் உண்டாகியுள்ளது மேலும் ஆர்யான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் வலுவாக இருப்பதால் இந்த வழக்கு அவர் தலைக்கு மேல் நிற்கும் கத்தியாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவர் ஜாமீன் ரத்து செய்யபட்டு கைது செய்யப்படலாம் என்ற சூழலும் இருப்பதால் மிகுந்த அதிர்ச்சியில் ஷாருக்கான் தரப்பு உள்ளது.