தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் மேட்டூர் அணையில் நீர் திறந்த போது மலர் தூவி நீரை வரவேற்றார் கூடவே மலர் வைத்திருந்த தட்டையும் தூக்கி எறிந்தது விமர்சனம் மற்றும் கிண்டலுக்கு உள்ளானது, இந்த நிலையில் தற்போது அதனை ட்ரோல் செய்யும் விதமாக ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது அது பின்வருமாறு :-
மேட்டூர் அணையில் தமிழக முதல்வர் அவர்களால் வீசி எறியப்பட்ட தட்டில் GPS கருவி பொருத்தப் பட்டுள்ளதாகவும்.. தண்ணீர் எந்தப்பகுதியை அடைந்திருக்கிறது.?எவ்வளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது ?என்பது போன்ற விபரங்களை தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள நீர்மேலாண்மை சர்வர் மூலம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் .
இதில் மிகவும் நவீனத்துவம் வாய்ந்த ஜப்பானியத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது விமானங்களில் பொருத்தப்படும் கருப்புப்பெட்டிக்கு இணையான தொழில்நுட்பம் என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொழில்நுட்பம் பற்றி அவர் ஜப்பான் முதல்வராக இருந்தபோதே அறிந்து கொண்டதாகவும்,இதை நமது மாநிலத்தில் எப்படியாவது அமல்படுத்தியே தீர வேண்டும் என அப்போதே உறுதி பூண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன் ஒருவர் பதிவிட இதையும் சில உடன் பிறப்புகள் உண்மை அறியாமல் பகிர்ந்தும் வருகின்றனர்.
முக்கிய பொது வாழ்வில் இருக்கும் தலைவர்கள் சிறிய அளவில் ஏதேனும் தவறு செய்தாலும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாவது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிகழ்வில் ஒன்றாக மாறி விடுகிறது.