
இந்திய திரைப்பட உலகில் பிரபல இயக்குனர், எழுத்தாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் சுந்தர் சி!! இதுவரை சுந்தர் சி 30 திரைப்படங்களுக்கு மேல் இயக்கி கலை மாமணி என்ற உயரிய விருதையும் வாங்கியுள்ளார் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. சுந்தர் சி தொடக்கத்தில் இயக்குனரான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக தான் பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.இந்த நிலையில் சமீபத்தில் அரண்மனை திரைப்படத்தினை வைத்து மூன்று பாகங்களை திரையில் வெளியிட்டு அதை சூப்பர் ஹிட் ஆகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை 3ன் தொடர்ச்சியாக தற்போது நான்காம் பாகத்தினையும் இயக்கி வந்தார். அந்த அரண்மனை நான்காம் பாகமும் தற்போது திரையில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் தொடர்பாக பல பேட்டரிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.
அதில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜித்தினை பற்றி தகவல் ஒன்றினை கூறியுள்ளார். அது என்னவென்றால்!!1999 ஆம் ஆண்டில் அஜித் அவர்களை வைத்து உன்னை தேடி என்கின்ற திரைப்படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது அந்த திரைப்படத்தின் சூட்டிங்கிற்காக 15 நாட்கள் அஜித் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நியூசிலாந்து நாட்டிற்கு சென்று படப்பிடிப்பை மேற்கொள்வதாக பிளான் செய்திருந்தார்களாம். ஆனால் அப்போது அஜித் சுந்தர் சி இடம் வந்து இந்த 15 நாள் சூட்டிங்ினை எனக்கு ஏழு நாட்களில் முடித்து தர முடியுமா?? என்று கேட்டாராம்!! ஏன் என்று சுந்தர் சி கேட்டபோது அஜித் கூறியிருக்கும் பதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இருந்ததாம்!! அது என்னவென்றால்!!நடிகர் அஜித் பொதுவாகவே பைக் கார் போன்ற ரேசில் அதிக அளவில் ஆர்வம் கொண்டவர் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதுவும் முன்பெல்லாம் அவர் ஏதாவது ஒரு ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டு அதனால் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவார்.
அதுபோலத்தான் உன்னை தேடி என்னும் திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஏதோ ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும், அதற்காக ஒரு பெரிய மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருப்பதாகவும், இந்த பெரிய மருத்துவர் விரைவில் ஓய்வு பெற போவதாகவும் அதற்குள் தனது ட்ரீட்மென்டை எடுத்து விட வேண்டும் என்றும் அஜித் சுந்தர் சி இடம் கூறியுள்ளார். இந்த நாள் 15 நாட்கள் இருக்கும் ஷூட்டிங்கில் ஏழு நாட்களுக்குள் எனக்கான ஷூட்டிங் எடுத்து விட்டால் எட்டாவது நாள் நான் திரும்பியும் இந்தியாவிற்கு சென்று அங்கு ஆபரேஷனை மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.மேலும் இதனைத் தொடர்ந்து ஆப்ரேஷன் முடிந்த பிறகு என்னுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை!! நடக்க முடியுமா அல்லது படுத்த படுக்கையாகி விடுவேனா என்று கூட தெரியாமல் இருக்கிறேன். அதனால் எனக்குரிய காட்சிகள் அனைத்தையும் விரைவில் எடுத்து விடுங்கள் என்று சுந்தர் சி இடம் கூறினாராம்!! இப்படி உடல்நிலை சரியில்லாததோடு அந்த திரைப்படத்தில் கடினமான காட்சிகளையும் நடித்து, எந்த ஒரு இடத்திலும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடனே இருந்தார். இதுபோன்ற கடினமாக உழைத்ததால் தான் இன்று திரை உலகில் ஒரு பெரிய நடிகராக இவர் இன்றும் விருந்து வருகிறார். மேலும் அதிக ரசிகர்களையும் இவர் சம்பாதித்து வைத்துள்ளார் என்றும் சுந்தர் சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.