சில தசாப்தங்களுக்கு முன்பு வரை தென்னிந்திய திரைப்படத்துறையில் முக்கிய தலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்கள் இவற்றிலேயே பெரும்பாலான தென்னிந்திய திரைப்படங்கள் அதாவது மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற அனைத்து திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எனவே அந்த காலத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்று உருவாக்கப்பட்டது. அது அந்த காலகட்டத்திற்கு சரியானது என்று சொல்லலாம்.
திராவிட கட்சிகள் உருவாவதற்கு முன்பு இன்னும் சொல்லப்போனால் இந்திய விடுதலைக்கு முன்பே இத்தகைய திரைப்பட தயாரிப்புகள் தமிழகத்தில் நடைபெற்று வந்தது இது ஒரு புறம் இருக்க ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்தந்த மாநில மொழிகளிலேயே அவர்களுடைய சங்கமானது அமைக்கப்பட்டது பட தயாரிப்புகளும் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெற்று வருகிறது.
உதாரணமாக மலையாள மொழியில்மலையாள திரைப்பட நடிகர் சங்கம் என்று அவர்கள் சங்கம் வைத்து நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சி நடைபெற்று வருவதாலும் , திராவிட கட்சி தலைவர்களே சினிமாவிலும் கோலோச்சி வருவதாலும் என்னவோ தெரியவில்லை தமிழ்நாட்டில் மட்டும் அந்த சங்கத்தின் பெயர் இன்னும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என்றே இருக்கிறது தற்பொழுது ஒரு மிகப்பெரும் பிரச்சனை ஒன்று உருவாகி இருக்கிறது .
தளபதி விஜய் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிற வாரிசு திரைப்படமானது ஆந்திர மாநில தியேட்டர்களில் குறைந்த அளவே தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து வலுப்பெற்று வருகிறது. இதற்கு தமிழ் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட இது திராவிட ஆட்சியாக இருப்பதால் அரசு இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
தமிழிலும் ராஜமவுலி அவர்கள் இயக்கிய பாகுபலி ட்ரிபிள் ஆர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாகி நல்ல வசூலை பெற்றது இதேபோன்று தமிழ் படங்களும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது வாரிசு திரைப்படமானது இவ்வாறு குறைந்த தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டால் தென்னிந்திய திரைப்பட உலகில் மிகப்பெரிய ஒரு பிரச்சனை வெடிப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது எனவே இதில் திரையுலகினரும் ஏன் அரசும் தலையிட்டு இதற்கான முடிவை ஏற்படுத்த வேண்டும் மற்ற மொழியினர் அவரவர் மொழியிலேயே மொழிக்கான ஒரு சங்கத்தையோ அல்லது அவர்கள் மொழி திரைப்படங்களின் மீது உள்ள ஒரு பற்றியோ தமிழகத்தில் காண முடியாத நிலை ஏற்படுவதற்கு திராவிடம் என்ற சொல்லே காரணம் என்று பார்க்கப்படுகிறது.
இத்தனைக்கும் இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பாளராலும் வம்சி என்ற தெலுங்கு இயக்குனராலும் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் வாரிசு அதற்கே அந்த நிலை என்றால் இன்னும் நேரடியாக தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரித்து தமிழ் இயக்குனர்கள் இயக்கி வரும் படங்களுக்கு பிற்காலத்திலும் பெரிய நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளும் இருக்கிறது இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அவசியம் தற்போது தமிழக அரசுக்கும் தமிழ் திரைப்பட பிரமுகர்களுக்கும் உள்ளது என்பதே நிதர்சனம்.
- அன்னக்கிளி