Cinema

முதல்வர் மற்றும் அண்ணாமலை பகிர்ந்த தமிழணங்கு குறித்து ஆசிரியர் போட்ட பதிவு வைரல் !

annamalai , ar rahman and stallin
annamalai , ar rahman and stallin

தமிழக முதல்வர் தமிழணங்கு என ஒரு புகைப்படத்தை பகிர அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுக்க இப்போது இது குறித்த விவாதம் அதிகரித்து வரும் சூழலில் ஆசிரியர் பெரியசாமி என்பவர் பதிலடி கொடுத்துள்ளார்,  கடந்த மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்திய புகைப்படத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்த அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றொரு தமிழ் தாய் புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்தார்.


இந்த சூழலில் ஆசிரியர் பெரியசாமி தங்கவேல் என்பவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு : அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள்.இசையமைப்பாளர் ரஹ்மான் அவர்கள் பகிர்ந்திருந்த  தமிழ் தாய் படமும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பகிர்ந்திருந்த தமிழ் தாய் படமும் இணைக்கப்பட்டுள்ளது.



இதில் யார் உண்மையான தமிழ் தாய்??பெண்களை தெய்வமாக வழங்கும் வழக்கம் தொன்று தொட்ட காலம் முதலே நம் தமிழர்களிடமிருந்து உள்ளது. அம்மா, சகோதரி, மனைவி, மகள், பாட்டி கொள்ளுப்பாட்டி என அனைவருமே நமக்கு தெய்வங்கள் தான். அதாவது நம்முடன் வாழ்ந்து வரும் பெண் தெய்வங்கள்.

அண்ணாமலை அவர்கள் பகிர்ந்த பெண் தெய்வத்தைப் போல் நாம் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு ஊரிலும் நம்முடன் வாழ்ந்து வரும் பெண்களை காட்ட முடியும்.

ஆனால் இசையமைப்பாளர் பகிர்ந்த பெண்ணைப் போல் ஒரே ஒரு பெண்ணை, நம்முடன் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டுப் பெண்ணை காட்ட முடியுமா?? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வன்மங்கள் எப்பொழுதும் நல்ல முடிவுகளை கொடுப்பதில்லை. மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என குறிப்பிட்டுள்ளார் பெரியசாமி தங்கவேல்.