Cinema

இளையராஜாவிற்கு ஆதரவாக விஜயகாந்த் தெரிவித்த கருத்து.. விமர்சகர்களுக்கு பதிலடி...!

Vijayakanth and ilayaraja
Vijayakanth and ilayaraja

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இசைஞானி இளையராஜாவை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் என அறிக்கை வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-


கடந்த சில தினங்களுக்கு முன்பு  பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் , பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார்.  அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

அண்ணல் அம்பேத்கர்,  பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்து காட்டாக உள்ளனர்.ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலதான் இங்கு  யாரையும் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

இளையராஜா அவர்களின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. என குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர், பிரதமர் மோடி, இளையராஜா என மூவருமே அவர்கள் துறையில் சாதித்துள்ளனர் என்று விஜயகாந்த் சுட்டிக்காட்டிய விவகாரம் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து சிலர் இளையராஜாவை அவரது சமூக ரீதியாக விமர்சனம் செய்துவரும் நிலையில் கலைத்துறையில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இளையராஜாவிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.