Technology

ஏன் கோவிலுக்குள் "செருப்பு போட கூடாது" என கேட்டவருக்கு கிடைத்த பதில்.. செம்ம வைரல்..!

temple and shoes
temple and shoes

KG ஜவஹர்லல் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரின் கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம் உள்ளது, ஏன் கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என கேட்ட வெளிநாட்டை சேர்ந்த நபருக்கு கிடைத்த பதில் என்ன என ஜவஹர்லல் பகிர்ந்த பதிவு பின்வருமாறு :-


‘என்னத்துக்காகக் கோயிலுக்குள் நுழைய காலணிகளைக் கழற்றணும்? எங்க கோயில்ல எல்லாம் போட்டுகிட்டே போகலாம்’ என்றார் அந்த ஸ்வீடன் நாட்டு என்ஜினீயர் .நானும் என் நண்பர்கள் சிலரும் அவரை வேலூர் கோயிலுக்குக் கூட்டிப் போயிருந்தோம். அவர் சொன்னதென்னமோ நிஜம்தான்; பல சர்ச்சுகளில் காலணிகளுடனே உள்ளே போக அனுமதிக்கிறார்கள்.

என் நண்பர்களில் ஒருவர், ‘கடவுள் கிட்டே ஒரு மரியாதைதான்’ என்றார். ‘செருப்புப் போடுவது எப்படிய்யா மரியாதைக் குறைவு ஆகும்? செருப்புங்கிறது உன் தேவைக்காக, உன் பாதுகாப்புக்காகப் போடறது. அதில் மரியாதை, மரியாதைக் குறைவெல்லாம் எங்கிருந்து வரும்?’ என்றார் மிஸ்டர் ஸ்வீடன்.

‘மரியாதையோ, இல்லையோ. சுத்தம் முக்கியமில்லையா? தெருவில் போட்டுக்கிட்டு நடந்த செருப்பைப் போட்டுக்கிட்டு அப்படியே கோயிலுக்குள்ளே போகலாமா?’ என்றார் இன்னொரு நண்பர். அப்போது செருப்பே அணியாத ஒரு பெண்மணி கோயிலுக்குள் நுழைந்தார்.

‘இந்தம்மா வெறும் காலோடுதானே தெருவில் நடந்து வந்தாங்க? காலைக் கழட்டி வச்சிட்டுப் போகச் சொல்வீங்களா?’ இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.‘மிஸ்டர் ஓல்ஸ்ஸன்’ என்றேன்.

‘யெஸ்’ ‘எங்கள் கோயில்களில் செருப்பைக் கழட்டிட்டு உள்ளே போகச் சொல்ல மரியாதையோ, சுகாதாரமோ காரணம் அல்ல. ஆரோக்யம்தான் காரணம்’ ‘எப்படி ஆரோக்யம்?’

‘எங்கள் கோயில்கள் எல்லாமே கற்களால் கட்டப்பட்டவை. தரை கல்தரை. சுட்ட செங்கற்கள், காரை எல்லாம் பயன்படுத்தத் தெரிந்த எங்கள் முன்னோர்கள் வேண்டுமென்றேதான் கல்லில் தரை அமைத்தார்கள்’

‘என்ன பெனிஃபிட்?’‘நம்ம உடம்பின் நூற்றுக்கணக்கான நரம்புகள் டெர்மினேட் ஆகிற இடம் பாதங்கள். ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு பண்ணி அக்யூபிரஷர் டிரீட்மெண்ட் எல்லாம் பண்ணிக்கிறீங்களே, அதையெல்லாம் அஞ்சு பைசா செலவில்லாம பண்ணிக்க எங்க முன்னோர்கள் பண்ணின டிரிக் இது’

‘ரியலி?’.....‘யெஸ். கோயில்ல வந்து வெறும் காலோடு சில நிமிஷங்கள் தினமும் நடக்கிறப்போ, ஃபிட்னஸ் அதிகமாகுது, பசி நல்லா எடுக்கும், ரத்த அழுத்தம் சீரா இருக்கும், உடம்பே ரீசார்ஜ் ஆனமாதிரி ஆயிடும்’ ‘இவ்வளவு நாளா எனக்குத் தெரியாதே!’

‘ஆஸ்க் சம் தெரப்பிஸ்ட்ஸ், தே வில் டெல் யூ. சிலரெல்லாம் பிரகாரத்தை பத்து முறை, ஐம்பது முறைன்னு சுத்துவாங்க. சிலர் அடிப் பிரதக்ஷினம்ன்னு ஒவ்வொரு பாதத்தையும் நிதானமா வச்சி மெல்ல நடப்பாங்க. சிலர் அங்கப் பிரதக்ஷினம்ன்னு உடல் பூரா படுகிற மாதிரி உருள்வாங்க. தே ஆல் கெட் பெனிஃபிட்ஸ்’

‘ஓ மை காட். ஐ வாண்ட் டு கெட் தி பெனிஃபிட்ஸ்’ என்று உடனே ஷூவைக் கழற்றி எறிந்தார் என பதிவு செய்துள்ளார் ஜவஹர்லல் உண்மையில் இது போன்ற பதில்கள் பலருக்கு தெரிய வேண்டும் என்ற காரணத்தால் இந்த பதிவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு TNNEWS24 இந்த தகவலை பகிர்ந்துள்ளது.